ரெய்கி

ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி நிலைகள்

ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி நிலைகள். ஒவ்வொரு ரெய்கி அமைப்பிலும், ரெய்கி பயிற்சிகளை பல நிலைகளாக (levels) வகுத்திருப்பார்கள், பலதரப்பட்ட பயிற்சிகள் (practices) மற்றும் விளக்கங்களை வழங்குவார்கள். ரெய்கியை எவ்வாறு வகுத்துக் கொண்டாலும், புரிந்துக் கொண்டாலும், பொதுவில் ரெய்கி என்று குறிப்பிடப்படுவது எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பொதுவான பிரபஞ்ச ஆற்றலைத்தான்.

சிறு தூசு முதல் பெரிய மலை வரையில் உருவாக காரணமாக இருந்தது இந்த ஆற்றல்தான். சிறு மழை துளி முதலாக சமுத்திரங்கள் வரையில் உருவாக காரணமாக இருந்தது இந்த ஆற்றல்தான். எறும்பு முதலாக யானை வரையிலான அத்தனை உயிர்களையும் படைத்து, அவற்றுக்கான இயக்க சக்தியாகவும், பராமரிப்பு சக்தியாகவும் விளங்குவதும் ரெய்கி எனும் பிரபஞ்ச ஆற்றல் தான். இந்த பிரமாண்ட பிரபஞ்சப் பேராற்றலை, பல நிலைகளாக வகுப்பதும் கட்டுப்படுத்துவதும் மனிதர்களால் இயலாத காரியம் அல்லவா.

ஹோலிஸ்டிக் ரெய்கியில், ரெய்கி பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களின் புரிதலுக்கும், அனுபவத்துக்கும், தேவைக்கும், ஏற்பவே வகுப்பு நிலைகளும் பயிற்சிகளும் வகுக்கப்பட்டுள்ளன. பயன்பாடு மற்றும் தேவைகளை தாண்டிய உயர்வும் தாழ்வும் என்பது நமது பயிற்சி நிலைகளில் கிடையாது. ஒரு கிராம் தங்கத்துக்கும், நூறு கிராம் தங்கத்துக்கும், விற்கும் வாங்கும் விலைகள் மாறுபடலாம் ஆனால் தங்கம் என்ற உலோகத்தின் மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது அல்லவா?

அதைப்போன்றே அடிப்படை நிலை ரெய்கி வகுப்பு முதல், மாஸ்டர் நிலை ரெய்கி வகுப்பு வரையில், தேவைக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்றவாறு மட்டுமே பயிற்சி நிலைகள் மாறுபடுகின்றன; அவற்றின் தரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அனைவரும் அனைத்து நிலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது.

அவர் அவரின் தனிப்பட்ட தேவைக்கும் புரிதலுக்கு ஏற்ற பயிற்சி நிலையைத் தேர்ந்தெடுத்து கற்றுக் கொண்டால் போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X