ஹோலிஸ்டிக் ரெய்கிக்கு அறிமுகம். ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி என்பது பாரம்பரிய ரெய்கியின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஹோலிஸ்டிக் என்ற வார்த்தைக்கு முழுமை அல்லது முழுமையானது என்று பொருளாகும். மனித வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் சூழ்நிலைகளையும் உள்ளடக்கிய புரிதலாக இருப்பதனால் ஹோலிஸ்டிக் ரெய்கி என்று அழைக்கப்படுகிறது.
ஹோலிஸ்டிக் ரெய்கி மனிதர்களின் வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், முழுமையான வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும். ஹோலிஸ்டிக் ரெய்கி, ஆற்றல், உடல், மனம், புத்தி, அலைகள், அதிர்வுகள், ஆத்மா, ஆன்மீகம், உலக வாழ்க்கை, என, பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மனித வாழ்க்கைக்கான முழுமையான புரிதலையும் பெற உதவியாக இருக்கும்.
Leave feedback about this