ஆன்மீகம்

இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள்

இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள். ஒரு நபர் “ஆபாச சிலைகளைக் காண வேண்டுமா கோவிலுக்குச் செல்லுங்கள்!” என்று பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அவர் மாற்று மதத்தைச் சார்ந்தவர் அல்ல, அவர் இந்து மதத்தைச் சார்ந்தவர்தான். அந்த பதிவைப் பார்த்த பின்பு இந்த கட்டுரையை எழுத வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

பழமையான, ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட இந்து மத கோவில்கள் முழுக்க முழுக்க மனிதனின் தன்மைகளை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

கோயிலின் வெளிப்புறம், அதாவது மதில், சுவர், கட்டிடங்கள் போன்றவை மனிதர்கள் வெளி உலகில் எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் மனநிலை என்ன என்பதைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். கோயிலின் வெளிப்புறத்தில் ஆபாசம், கொடூரம், வன்மம், காமம், கோபம், பகை போன்ற தீய குணங்களை வெளிப்படுத்தக்கூடிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இருக்கும். இவை கடவுளை மறந்த அல்லது கடவுளை விட்டு தூரமான மனிதர்களின் மனநிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

கோவில் உள்ளே செல்ல செல்ல மேலே குறிப்பிட்ட வகைகளைச் சார்ந்த சிற்பங்கள் மாறி, வரலாறு, புராணம், இதிகாசம் போன்றவற்றைக் குறிக்கக் கூடிய சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கும். கருவறையைச் சுற்றிலும் வேதம், புராண, மற்றும் தெய்வ கதைகளைக் குறிப்பிடும் சம்பவங்கள் சிற்பமாகவோ சிலையாகவோ வடிக்கப்பட்டிருக்கும்.

அதைத் தொடர்ந்து கருவறைக்குள் சென்றால் ஒன்றுமில்லாத வெற்றிடமாக இருட்டு அறை இருக்கும். இந்த அறை மனிதனின் கருவறையைக் குறிக்கிறது. அங்கே ஒரு தெய்வ சிலை மட்டும் இருக்கும் அது மனிதனின் ஆத்மாவைக் குறிக்கிறது.

மனிதன் தெய்வ நிலையில் இருந்து விலகிச் செல்லச் செல்ல தீய குணங்கள் அதிகரிப்பதையும் தீய குணங்களிலிருந்து விலகிச் செல்லச் செல்ல தெய்வ நிலை அதிகரிப்பதையும் கோவில் அமைப்பு குறிக்கிறது. கோவிலில் இருக்கும் ஆபாச சித்திரம் மற்றும் வன்முறை காட்சிகள் தெய்வ நிலையை இழந்த மனிதர்களின் குணாதிசயத்தைப் பிரதிபலிக்கின்றன.

    • August 28, 2024 11:20 pm

    கோவில் அமைப்பில் இருக்கும் சிற்பங்களி அர்த்தத்தை மிகவும் தெளிவாக சிறப்பாக எடுத்துக் காட்டியதற்கு நன்றி ஐயா 🙏🏼🙏🏼

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X