அரசியல்

ஹீலர் பாஸ்கரின் கைதின் உண்மை நோக்கம் என்ன?

#image_title

ஹீலர் பாஸ்கரின் கைதின் உண்மை நோக்கம் என்ன? ஹீலர் பாஸ்கர் எவ்வாறு வீட்டுப் பிரசவம் செய்வது என்று பயிற்சி கொடுக்கிறார் என்ற காரணத்திற்காக கைது செய்திருக்கிறார்கள். இந்த கைதின் நோக்கம் என்ன? வீட்டுப் பிரசவம் நடக்கக் கூடாது என்பதா? அல்லது சுகப்பிரசவமே நடக்கக் கூடாது என்பதா?

யாருமே இனி சுகப்பிரசவத்தைப் பற்றி பேசக்கூடாது, வீட்டுப் பிரசவத்தைப் பற்றி பேசக்கூடாது. வீட்டுப் பிரசவம் செய்வது எவ்வாறு என்று யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று அனைவரையும் பயமுறுத்தும் நோக்கத்துடன் மட்டுமே ஹீலர் பாஸ்கர் அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். இனிமேல் அனைவரும் வீட்டுப் பிரசவம் செய்வது எவ்வாறு என்று பேச அஞ்சுவார்கள் அல்லவா? இதுதான் அவர்களின் நோக்கம்.

சரி! தெரிந்து கொண்டேதான் கேட்கிறேன் சுகப்பிரசவமோ, வீட்டுப் பிரசவமோ நடப்பதினால் அரசாங்கத்திற்கு என்ன நஷ்டம்? அல்லது “வீட்டுப் பிரசவம் முயற்சி செய்து ஒரு பெண்மணி இறந்துவிட்டார், அதனால்தான் கைது செய்கிறோம்” என்றால் ஆங்கில மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன? பிரசவத்தின் போது எத்தனை பெண்மணிகள் உயிரிழக்கிறார்கள்? தவறான ஊசி, தவறான மருந்து, தவறான அறுவை சிகிச்சை, என்று வருடத்திற்கு எத்தனை ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள்? ஆங்கில மருத்துவத்தைத் தடை செய்யலாமா? ஆங்கில மருத்துவமனைகளை மூடிவிடலாமா? அரசாங்கத்திற்கு அந்த தைரியம் இருக்கிறதா? குறைந்தபட்சம், ஏன் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று சிந்திக்கவோ, கேள்விகளை எழுப்புவதற்கோ ஆண்மை இருக்கிறதா? அரசாங்கத்திற்கும், அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும்?

இந்த கட்டுரையை எழுதும் நான் வீட்டில் தான் பிறந்தேன், உயிரோடு இருக்கிறேன். ஆங்கில மருத்துவமனையில் பிறந்த என் தம்பி பிறந்த அன்றே இறந்துவிட்டார்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X