குணப்படுத்த முடியாத நோய்கள் என்று சில நோய்களை மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். அந்த நோய்களைக் கண்டவர்கள், அவற்றை உண்மையிலேயே குணப்படுத்த முடியாது என்று நம்பிக்கை கொண்டு அந்த பயத்தினாலே பல இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் இறந்துவிடுகிறார்கள். உண்மையில் அவை அந்த மருத்துவர்களுக்கு குணப்படுத்தத் தெரியாத நோய்களே ஒழிய எவராலும் குணப்படுத்த முடியாத நோய்கள் அல்ல.
பிறவியிலேயே தோன்றினால் ஒழிய குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவுமே கிடையாது. இந்த உலக மக்களுக்கு உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு மருத்துவத்தில் நிச்சயமாக தீர்வு இருக்கும். ஆங்கில மருத்துவம் தான் கெதி என்று கிடப்பதினால்தான் பலர் தங்கள் நோய்களுக்குத் தீர்வு காண முடியாமல் திண்டாடுகின்றனர். தங்கள் நோய்களை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவத்தைக் கண்டறிந்து பின்பற்றினால், எல்லா நோய்க்கும் நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.
Leave feedback about this