நோய்கள்

குணப்படுத்த முடியாத நோய்கள்

Barefoot Patient on a Wheelchair

குணப்படுத்த முடியாத நோய்கள். சில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத நோய்கள் என்று நோய்களின் பெயர்ப் பட்டியலை வைத்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட நோய் கண்டவர்கள் அந்த மருத்துவர்களிடம் சென்றால், உங்கள் நோயை யாராலும் குணப்படுத்த முடியாது, நீங்கள் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறிவிடுவார்கள்.

அதை நம்பும் நோயாளிகளும் மனம் தளர்ந்துவிடுவார்கள். தனது நோயை குணப்படுத்தும் மருத்துவம் மற்ற மருத்துவ முறைகளில் இருக்கும் என்று நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். மனம் தளர்ந்துவிட்ட நோயாளிகளின் தொந்தரவு மேலும் மோசமடையத் தொடங்கும்.

இந்த உலகில் குணப்படுத்த முடியாத நோய்கள் எவை என்று பார்த்தால், இந்த உலகில் சரி செய்ய முடியாத அல்லது குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவுமே கிடையாது. பெரும்பாலான நோயாளிகள் செய்யும் தவறு என்னவென்றால், அவர்கள் தங்களின் நோய்கள் அனைத்தையும் ஆங்கில மருத்துவம் மூலமாகவே குணப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று, அப்பால் நாற்கூற்றே மருந்து.

குறள் 950

உரை
நோயாளி, அந்த நோயை குணப்படுத்தக் கூடிய மருத்துவர், நோயாளியின் நோய்க்குத் தக்க தரமான மருந்து, நோயாளியின் அருகில் இருந்து பரிவுடன் கவனித்துக் கொள்பவர், இவை நான்கும் இணைவதே முறையான மருத்துவமாகும்.

மேலே குறிப்பிட்ட குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். ஒரு நோய் உண்டானால் அந்த நோயை குணப்படுத்தக் கூடிய மருத்துவத்தையே நாட வேண்டும் என்று. எல்லா நோயையும் ஒரு குறிப்பிட்ட மருத்துவத்தில் குணப்படுத்திவிட முடியாது. நோயைக் குணப்படுத்தக் கூடிய சரியான மருத்துவத்தை நாடாமல். தன் அறியாமையினாலும், சில வியாபாரத் தந்திரங்களிலும் சிக்கி தனது உடலையும் மனதையும் பணத்தையும் நோயாளிகள் வீணாக்குகிறார்கள்.

உங்கள் நோய் குணமாக வேண்டும் என்றால், தொந்தரவின் மூலத்தையும் அந்த நோய் உண்டான காரணத்தையும் கண்டறிந்து, அதை குணப்படுத்தக் கூடிய, இயற்கை வைத்தியங்களையே நாடுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். குணப்படுத்த முடியாத நோய் என்று ஒன்றுமே கிடையாது. நோயைக் குணப்படுத்தத் தெரியாத நபரிடம் சென்றால், குணப்படுத்த முடியாது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடுங்கள், அல்லது அந்த உறுப்பை வெட்டி எடுத்து விடுங்கள் என்றுதான் கூறுவார். இப்படிப்பட்ட மருத்துவர்களிடமிருந்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் காத்துக்கொள்ளுங்கள். இறைவன் துணை புரிவான்.