எழுத்தாளர்களுக்கு உதவக்கூடிய ஆண்ட்ராய்டு மென்பொருள். கூகுளை டோக்ஸ் (Google Docs) இது எழுதுபவர்களுக்கும், மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். கையடக்க தொலைபேசியில் இருப்பதனால் எங்கேயும் எப்போதும் எழுதலாம். கற்பனை தோன்றும்போது காகிதங்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. Microsoft wordடுக்கு மாற்றாக இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவசமானது.
இந்த மென்பொருளைக் கையடக்க தொலைப்பேசியிலும், கணினியிலும், டேப்லெட்டிலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எழுதும் போது பலர் ஒரே நேரத்தில் ஒரே கட்டுரையே எழுதலாம், திருத்தலம்.
இந்த மென்பொருளில் எழுதும் போது நீங்கள் எழுதுபவை உடனுக்குடன் உங்களின் google drive கணக்கில் பதிந்துவிடும், நீங்கள் எழுதுபவை அழிந்துவிடாமல் பாதுகாக்கலாம். இந்த மென்பொருளைக் கொண்டு தமிழில் எழுதினாலும் எழுத்துப் பிழைகளைச் சரி பார்க்கலாம்.
இத்துடன் Google Keyboard என்ற மென்பொருளைப் பயன்படுத்தினால் நீங்கள் சொல்வதை கூகுள் டாக்கில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.