பெண்கள்

பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவதற்கு முக்கியமான 10 காரணங்கள்

close-up photo of man and woman sitting on bench

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது குதிரைக் கொம்பைப் போலவும், நடப்பதற்கு மிகவும் அரிதான காரியம் போலவும் ஆங்கில மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களால் சித்தரிக்கப்படுகிறது.

வாழ்க்கை முறையில் சில மாறுதல்களைச் செய்வதன் மூலமாக இயற்கையாக கர்ப்பம் தரித்துவிடலாம் என்று இருக்கையில், அப்பாவி தம்பதிகளிடன் லட்சங்களை கட்டணமாக கறக்க வேண்டும் என்றால் பொய் கூறித்தானே ஆக வேண்டும்? பொய்யான வாக்குறுதிகளும் பித்தலாட்டமும் இல்லாமல் தெருவுக்குத் தெரு கருத்தரிப்பு மையம் நடத்த முடியுமா?

இறைவனை, இயற்கையை, உங்கள் உடலை நம்புங்கள். கீழே குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களைக் கவனித்து திருத்திக் கொண்டால் அல்லது இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி அவற்றைச் சரி செய்துகொண்டால் எல்லா பெண்களாலும் சுலபமாக கர்ப்பம் தரிக்க முடியும். பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவதற்கு முக்கியமான 10 காரணங்கள்.

சீரான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருப்பது.

சீரான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அவற்றில் முக்கியமானது உடலின் பலவீனம். பலவீனமான உடலில் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியாது அதனால் குழந்தை தங்குவது கடினம்.

அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது மற்றும் உடல் பருமனாக இருப்பது.

அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்ளும் போதும், அளவுக்கு அதிகமாக உடல் பருமனாக இருக்கும் போதும், அந்த உடலின் உருவாகும் ஆற்றல் அந்த உடலின் இயக்கத்துக்கே போதாது, மேலும் குடலும் வயிறும் பெருத்து இருப்பதனால் கரு வளரவும் வயிற்றில் இடம் போதாது. குழந்தையை உருவாக்கவும் வளர்க்கவும் ஆற்றல் போதாமல் இருப்பதனால் குழந்தை தங்காது.

இரவு நேரத்தில் உறக்கம் குறைவாக இருப்பது அல்லது தாமதமாக உறங்குவது.

இரவு உறங்கும் நேரத்தில் தான் பல முக்கியமான விசயங்கள் உடலில் நடைபெறுகின்றன. அவற்றில் முக்கியமானவை உடலின் கழிவுகளை வெளியேற்றுவதும் உடலின் பாதிப்புகளைச் சரி செய்வதும். இந்த இரண்டு வேலைகளும் சரியாக நடக்க முடியாமல் போனால் உடல் பலவீனமாகி குழந்தை தரிக்க தாமதமாகலாம்.

‎ஹார்மோன் ஊசி அல்லது மாத்திரைகளைப் பயன்படுத்துவது.

ஹார்மோன் ஊசி மற்றும் மாத்திரைகள் உடலைப் பலவீனப்படுத்தக் கூடியவை மேலும் கர்ப்பப்பையில் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கக் கூடியவை. இதனால் அவற்றை அதிக முறைகள் பயன்படுத்தியவர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கு கருமுட்டை உற்பத்தி தடைப்படலாம் மேலும் கர்ப்பப்பை பலவீனமாகலாம்.

‎இரசாயன மருந்து மாத்திரை மற்றும் ஊசிகளின் பயன்பாடு.

‎இரசாயன மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கையும் பல பக்க விளைவுகளையும் விளைவிக்கக் கூடியவை. அதனால் இவற்றை உடலில் கலக்க விடாமல் எதிர்ப்புச் சக்தி உடனுக்குடன் வெளியேற்றிவிடும்.

இரசாயன மருந்து மாத்திரை அல்லது ஊசிகளை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இந்த இயக்கம் தினமும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பதால் அவர்களின் உடலின் ஆற்றல் அதிகமாக விரயமாகும். உடலில் ஆற்றல் தட்டுப்பாடும் உருவாகும், அதனால் குழந்தை தரிப்பது தாமதமாகும்.

‎அதிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது.

அழகு சாதனப் பொருட்களில் இருக்கும் இரசாயனங்கள் ரத்தத்தில் கலந்து உடலை பலவீனப் படுத்தக் கூடியவை மேலும் கர்ப்பப்பையின் இயக்கத்தைப் பலவீனப் படுத்தக் கூடியவை அதனால் கருத்தரிப்பது தாமதமாகலாம்.

‎தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமை.

கணவனும் மனைவியும் அசதியாக இருக்கும் போது, உடல் பலவீனமாக இருக்கும் போது, அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடும் விருப்பமும் இல்லாமல் இருக்கும் போது உடலுறவு கொண்டால் குழந்தை தரிப்பது கடினம்.

கர்ப்பப்பை அல்லது பிற உடல் உறுப்புகளின் பலவீனம்.

பெண்ணின் கர்ப்பப்பை பலவீனமாக இருந்தாலோ, அவளின் பிற உடல் உறுப்புகளில் ஏதாவது பலவீனங்கள் இருந்தாலோ குழந்தை தரிப்பது தாமதமாகலாம். நோய்கண்ட அல்லது பலவீனமான உடலில் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியாது அதனால் குழந்தை தங்காது.

‎நோய் மற்றும் அதற்குப் பார்க்கும் மருத்துவம்

நோயினாலும் அந்த நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருத்துவம் மற்றும் மருந்துகளாலும் உண்டாகும் பாதிப்புகளால் சிலருக்கு குழந்தை தங்காது.

மனம் சமமின்மையாக இருத்தல்

கணவன் அல்லது மனைவியின் மனம் சமநிலையில் இல்லாமல் இருந்தால்; கோபம், பொறாமை, எரிச்சல், கர்வம், பயம் போன்ற குணங்கள்; அல்லது வேறு வகையான மனநலப் பாதிப்புகள் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் அதனால் சிலருக்கு குழந்தை தங்காது.

ஆரோக்கியமான குழந்தை தரிக்க

ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு பெண்ணாக இருப்பதும் ஆரோக்கியமான கர்ப்பப்பையும் மட்டுமே போதாது. உடலின் அனைத்து உறுப்புகளும் உடலின் இயக்கமும் ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே, உடல் நிலையிலும் மன நிலையிலும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான கரு தரிக்கும். இதனைப் புரிந்துகொண்டு இயற்கையான முறையில் உடலை பாதுகாத்து உடலின் இயக்கத்தை சரி செய்தால் எளிதாக கர்ப்பம் தரிக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் பிறக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field