அஜீரணமும் மலச்சிக்கலும் எவ்வாறு நோய்களாக மாறுகின்றன? பசியில்லாத போது உணவை உட்கொண்டால், உணவை ஜீரணிப்பதற்கான சுரப்பிகள் முறையாகச் சுரக்காது. பசியில்லாமல் உட்கொண்ட உணவு வயிற்றிலேயே அதிக நேரம் கிடக்கும். வயிற்றில் கிடக்கும் உணவு கெட்டுப்போகத் தொடங்கும். அந்த கெட்டுப்போன உணவிலிருந்து உண்டாகும் வேதிப் பொருட்களும் இரசாயனங்களும் உடலிலேயே தேங்கத் தொடங்கும். அந்த இரசாயனங்கள் தேங்கும் உறுப்புகளைக் கெடுத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனைப் பாதித்து நோய்களை உண்டாக்கும். பசியின் அளவுக்கு மிகுதியாக உணவை உட்கொண்டாலும் இவ்வாறான பாதிப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
மலம் என்பது ஜீரணமான உணவின் கழிவுகள்தான். உட்கொண்ட உணவு ஜீரணமாகாத போது உடலுக்கு சத்தும் கிடைக்காது மலமும் முழுதாக வெளியேறாது. மலம் குடலிலேயே தேங்கத் தொடங்கும். குடலில் தேங்கத் தொடங்கும் மலம், இரத்தத்தில் கலந்து உடலில் நோய்களை உண்டாக்கும்.
உடலில் தேங்கும் கழிவுகள் இந்த உறுப்பில்தான் நோய்களை உண்டாகும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அந்த கழிவுகள் இரத்தம் மூலமாக கால் பாதம் முதல் தலை வரையில் உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். உடலில் எங்கு வேண்டுமானாலும் நோய்களை உண்டாக்கலாம். சேர்ந்த கழிவுகளின் வீரியத்துக்கு ஏற்ப நோய்களில் தன்மையும் இருக்கும்.