எவையெல்லாம் நோய்கள்? எவையெல்லாம் நோய்கள் அல்ல? ஒரு மனிதனின் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். எவையெல்லாம் நோய்கள்? எவையெல்லாம் நோய்கள் அல்ல என்பதை அறியாமல். உடலில் எந்த தொந்தரவுகள் தோன்றினாலும் அதைத் தடுக்க வேண்டும், அதைக் குறைக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இந்த தவறான பழக்கமே சில சிறிய தொந்தரவுகளும் கொடிய நோய்களாக மாறுவதற்குக் காரணமாக அமைகிறது.
நோய்கள் எவ்வாறு உருவாகின்றன?
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”.
நம் உடலில் ஒரு தொந்தரவு அல்லது நோய் உருவாகிறது என்றால், நாம் செய்த அல்லது செய்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு தவறான செயல்தான் அதற்குக் காரணமாக இருக்கும். அது தவறான உணவுப் பழக்கமாக இருக்கலாம், நீர் அருந்தும் முறையாக இருக்கலாம், வாழ்க்கை முறையாக இருக்கலாம், தீய பழக்கங்களாக இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அது நமது தவறுதான்.
நோய்கள் உருவானால் எவ்வாறு குணப்படுத்துவது?
நோய்களைக் குணப்படுத்துவது மிகவும் எளிதான காரியம். “எரிகின்ற கொல்லியை உருவினால் கொதிக்கிறது, தானாக அடங்கிவிடும்” அவ்வளவுதான். நம் அன்றாட வாழ்வில் என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்து, அந்தத் தவறுகளைத் திருத்திக் கொண்டால், தொந்தரவுகள் தானாக நீங்கிவிடும்.
எவையெல்லாம் நோய்கள் அல்ல?
இது மிக முக்கியமான விசயம், நோயென்றால் என்னவென்று அறியாமல், பலர் உடலில் உண்டாகும் அத்தனை மாற்றங்களுக்கும் மருந்துகளை உபயோகித்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள்.
நோய்கள் அல்லாதவை
- தும்மல்
- சளி
- சளி கட்டி
- இருமல்
- காய்ச்சல்
- வலிகள்
- புண்கள்
- அரிப்பு
- கட்டிகள்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
இன்னும் பல தொந்தரவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டுள்ள எதுவுமே நோய்கள் அல்ல, இவை சாதாரணக் கழிவு நீக்கங்களே. உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை உடல் வெளியேற்றுகிறது அவ்வளவுதான். கழிவுகள் தான் உடலை விட்டு வெளியேறுகின்றன என்பதை உணராமல் அவற்றை நோய்கள் என்று நம்பி அவற்றைத் தடுப்பது தான் கொடிய நோய்கள் உருவாக மூல காரணமாக அமைகிறது.
கழிவு நீக்கங்களை சற்று விரிவாக பார்ப்போம்.
1. தும்மல் – நம் உடலுக்கு ஒவ்வாத தூசிகள் அல்லது கிருமிகள் சுவாசம் மூலமாக உடலுக்குள் சென்றுவிட்டால், உடல் அவற்றை வெளியேற்ற தும்மலை உருவாக்குகிறது. அவை முழுமையாக வெளியேறும் வரையில் தும்மல் தொடரும்.
2.சளி – தும்மலை மருந்துகளைப் பயன்படுத்தித் தடுக்கும் போது அல்லது உடலால் கழிவுகளை தும்மல் மூலமாக வெளியேற்ற முடியாத போது. அவை நுரையீரலைச் சென்றடைகின்றன. நுரையீரலில் சேர்ந்த கழிவுகளை சளியாக மாற்றி நுரையீரலிலிருந்து உடல் வெளியேற்றும்.
3. சளி கட்டி – சளியாக கழிவுகளை வெளியேற்ற முடியாத போது, அந்த கழிவு கெட்டி சளியாக மாறுகிறது.
4. இருமல் – அந்த கெட்டி சளியை வெளியேற்ற நுரையீரலுக்கு உதவுவதற்காக உடல் இருமலை உருவாக்கும்.
5. காய்ச்சல் – இது மிக முக்கியமான செய்தி. கெட்டி சளியாக கூட கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போது. அந்த கெட்டி சளியை திரவமாக மாற்றுவதற்கு உடல் காய்ச்சலை உருவாக்குகிறது. காய்ச்சல் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காகவும் உருவாகிறது. அவை, உடலில் நுழைந்த கிருமிகளைக் கொல்வதற்கு, உடல் நோய்களைக் குணப்படுத்துவதற்கு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு, உடலுக்குச் சக்தியை வழங்க மற்றும் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காக காய்ச்சல் உருவாகிறது.
6. வலிகள் – வலிகள் என்பவை ஒரு எச்சரிக்கை மட்டுமே. வலிகள் உண்டானால் உடலில் ஏதோ ஒரு உபாதை உருவாகி இருக்கிறது என்று அர்த்தம். (வலிகள் பற்றிய கட்டுரையை வாசிக்கவும்).
7. புண்கள் – உடலில் மற்றும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் சில காரணங்களுக்காக தோலின் மூலமாக வெளியேறுகின்றன.
8. அரிப்பு – உடலின் சக்தி ஓட்டத்தில் அடைப்பு ஏற்படும் போதும், தோலிலும் உடலிலும் கழிவுகள் அதிகமாக தேங்கும் போதும். தோலில் இரத்த ஓட்டம் தடைப்படும் போதும். அவற்றை உணர்த்தவும், அவற்றை சரிசெய்யவும் தோலில் அரிப்புகள் உண்டாகலாம்.
9. கட்டிகள் – உடலில் தேங்கி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை தோலின் மூலமாகவும், நேரடியாகவும் உடல் வெளியேற்றுகிறது. இந்த கட்டிகளைத் தடுத்தால், அந்த கழிவுகள் உடலின் உள்ளேயே கட்டியாக வளர்ந்துவிடும்.
10. வாந்தி – வயிறு வரையில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது. வாயால் உட்கொண்ட உணவு அல்லது பொருட்கள் உடலுக்கு ஒவ்வாத போது. உடல் அவற்றை வாந்தியாக உடலை விட்டு வெளியேற்றும்.
11. வயிற்றுப் போக்கு – உட்கொண்ட உணவு உடலுக்குக் கெடுதியாக இருந்தால். அது வயிற்றைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், அவை வயிற்றுப் போக்காக வெளியேறும்.
மேலே குறிப்பிடப்பட்ட 11 விசயங்களும் மிக முக்கியமான விசயங்கள். உடலுக்கு மிகவும் நன்மையான இந்த 11 விஷயங்களைத் தடுக்கும் பொது, அவற்றைத் தொந்தரவு செய்யும் போது. கழிவுகள் உடலை விட்டு வெளியேற முடியாமல் உடலின் உள்ளேயே தேங்கிவிடுகின்றன.
உடலை விட்டும் வெளியேற வேண்டிய இந்த கழிவுகளை, நோயென்று நம்பி மருந்து மாத்திரைகளைக் கொண்டு தடுக்கும் போது. அவை உடலிலேயே தேங்கி, அடைப்பு, சொறி, சிரங்கு, இரைப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, உடல் உறுப்புகளின் செயல்திறன் இழப்பு, பக்கவாதம், புற்றுநோய், போன்ற கொடிய நோய்களாக மாற்றமடைகின்றன.
அதனால் எந்த காரணத்தைக் கொண்டும். உங்கள் உடலில் இந்த 11 விஷயங்கள் உருவானால் அவற்றைத் தடுக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் இவற்றைத் தடுக்கும் போது, எதிர்காலத்தில் அவர்கள் கொடிய நோயாளிகளாக அவதிப்படுவதற்கு நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள். அதீத அன்பின் காரணமாக உங்கள் பிள்ளைகளை நோயாளிகளாக மாற்றிவிடாதீர்கள்.
Leave feedback about this