நோய்கள்

எது உண்மையான நோய்? எது உண்மையான மருத்துவம்?

எது உண்மையான நோய்? எது உண்மையான மருத்துவம்? உடலில் ஏதாவது வலி, தொந்தரவு, அல்லது இயலாமை, ஏற்பட்டால் மருத்துவர்களை நோக்கி ஓடி, அந்த தொந்தரவை, வலியை அடக்குவதிலேயே மும்முரமாக இருக்கிறோம். அந்த தொந்தரவு ஏன் உருவானது? என்ன காரணம்? என்று சிந்திக்க யாரும் தயாராக இல்லை. நோய் ஏன், எவ்வாறு உண்டானது என்பதை அறியாமல் நோய்களை எவ்வாறு களைய முடியும்?

நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு தொந்தரவையும், வலியையும், இயலாமையையும் நோய் என்றும் மருந்து சாப்பிட்டால்தான் குணமாகும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இல்லாததை நம்புவது தான் மூட நம்பிக்கை என்றால். எனக்கு நோய் உள்ளது மருந்து சாப்பிட்டால்தான் குணமாகும் என்று நம்புவதுதான் மூட நம்பிக்கையின் உச்சம்.

நோய்களைப் பற்றிய பயம்

மருந்து கம்பெனி முதலாளிகள், பொது ஊடகங்களின் மூலமாக நோய்கள் பற்றிய தவறான கருத்துக்களையும், தகவல்களையும் மக்களிடையே பரப்புகின்றனர். பொது ஊடகங்களில் வருவதால் மக்களும் அவற்றை உண்மை என்று நம்புகிறார்கள்.

ஒரு உண்மையை தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ், பத்திரிகை, இணையம், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் வருபவை அனைத்தும் முழுமையான, உண்மையான தகவல்கள் கிடையாது. பொது ஊடகங்கள் உண்மையை மட்டுமே சொல்லும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

தவறான மருத்துவம்

இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான மருத்துவ முறைகள், அதன் மருத்துவர்களை, இந்த நோய்க்கு இந்த மருந்து, அந்த நோய்க்கு அந்த மருந்து என்ற வகையில்தான் பயிற்றுவிக்கின்றன. பல மருத்துவர்கள் மருந்துகளைப் பற்றி மட்டும் படித்து விட்டு வந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் தான் அவர்களால் எந்த நோயையும் முழுமையாக குணப்படுத்த முடிவதில்லை.

ஒரு உண்மையைத் தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள், பல மருத்துவர்கள் நோய்களைக் குணப்படுத்துவதில்லை. நோயை உணராமல் மறைக்கும், நோயை உடலுக்குள்ளேயே அடக்கும், ஒரு நோயை வேறு நோயாக மாற்றும் வேலைகளை மட்டுமே செய்கிறார்கள். ஒரு நோய்க்காக மருத்துவம் செய்யத் தொடங்கும் போது, பல புதிய நோய்கள் உருவாவது இதனால்தான். பழைய நோயினால் தான் புதிய நோய்கள் உருவாகின என்று மருத்துவர்கள் கூறுவார்கள், அது முழுமையான உண்மையல்ல.

மருத்துவம் செய்யாமல் ஒரு நோயிலிருந்து , மற்றொரு நோய் தோன்றினால் அவர்கள் சொல்வது சரி. ஆனால் மருத்துவம் செய்யத் தொடங்கிய பிறகு புதிய நோய்கள் உண்டாகத் தொடங்கினால் அதற்கு அந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் தான் காரணமாக இருக்க முடியும். ஒருவேளை மருந்துகளினால் புதிய நோய்கள் தோன்றவில்லை என்று மருத்துவர்கள் கூறினால்; அவர்கள் கொடுக்கும் மருந்து பொய்யானது, அவை நோய்களைத் தடுப்பதில்லை என்பதை ஊர்ஜிதமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X