எதிர்மறை வார்த்தைகளால் உருவாகும் நோய்கள். உங்களின் உடலைப் பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள், அச்சமின்றி ஆரோக்கியமாக வாழுங்கள். நம்மிடம் கூறப்படுபவையும், நாம் நம்பிக் கொண்டிருப்பவையும் முழுவதும் உண்மைகள் அல்ல.
நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் தவறான நம்பிக்கைகள்
1. வயதானால் உடலில் நோயும் தொந்தரவும் உருவாகும்.
2. வயதானால் உடலின் இயக்கம் குறையும்.
3. வயதானால் உடல் உறுப்புகளின் செயல்திறன் குறையும்.
4. பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கும் நீரிழிவு உண்டாகும்.
5. காய்ச்சல் இருந்தால் உடலில் வலிப்பு உண்டாகும்.
6. காலையில் சாப்பிடாவிட்டால் உடல் தொந்தரவு உருவாகும்.
7. நோய்கள் மற்றவர்களுக்கு பரவும், தொற்றும்.
8. குழந்தை பெற்றால் உடலில் தொந்தரவுகள் உருவாகும்.
9. குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் வளர்வதற்கும் சத்து மாத்திரைகள் தேவை.
10. ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சத்து மாத்திரைகள், சத்து மாவுகள் போன்றவை தேவை.
11. சில தேர்ந்தெடுத்த உணவுகளை சாப்பிட்டால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.
12. நோய்களைக் குணப்படுத்த முடியாது.
13. பழுதடைந்த உறுப்பை சரி செய்ய முடியாது.
14. நோய்களுடன் வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
15. மருந்து மாத்திரை சாப்பிடாமல் எந்த நோயும் குணமாகாது.
16. அனைத்து பெண்களாலும் சுகப் பிரசவமாக குழந்தையை ஈன்றெடுக்க முடியாது.
இவ்வாறான பல தவறான புரிதல்களும் நம்பிக்கைகளும் நம்மிடையே உள்ளன. இவற்றை மேலும் ஊதி பெரிதாக்கி, பீதியைக் கிளப்பி, பயத்தை உருவாக்கி, மனதைக் கெடுத்து, நோய்களை உண்டாக்குவது, இன்றைய மருத்துவ உலகில் ஒரு கேடு கெட்ட வியாபாரத் தந்திரமாக இருக்கிறது.
யார் எதைச் சொன்னாலும், அவ்வளவு ஏன் நான் சொன்னால் கூட அப்படியே நம்பாதீர்கள். உங்கள் உடலையும், மனதையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் நம்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும், எல்லாத் தொந்தரவுகளும் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.