நோய்கள்

ADR – எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள்

தலைப்புகள்

பல நோயாளிகள் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் பெரும்பாலான உடல் உபாதைகள் நோய்களினால் உருவானவை அல்ல மாறாக ஏ.டி.ஆரினால் உருவாக்கப்பட்டவை. ஆங்கிலத்தில் ADR என்று அழைக்கப்படும் இந்தத் தொந்தரவு, இக்காலகட்டத்தில் பல நோயாளிகளை வாட்டி வதைக்கும் தொந்தரவாக உருவெடுத்துள்ளது. உண்மையில் இப்படி ஒரு நோய் உருவாகி இருப்பதும், இந்த நோயினால்தான் நாம் பல உடல் உபாதைகளை அனுபவிக்கின்றோம் என்பதும் பல நோயாளிகளுக்குத் தெரிவதில்லை, மற்றும் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகிறது.

ADR என்றால் என்ன?

ஏ.டி.ஆரின் முழு விளக்கம் ADR “Adverse drug reaction” அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள். ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் இரசாயனங்களில் இருந்து அல்லது இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டவை. இது, மருந்தைப் பரிந்துரைக்கும் மருத்துவர் உட்பட அதனை உட்கொள்ளும் நோயாளி வரையில் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். தெரிந்தே நோயாளிகள் உட்கொள்கிறார்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தின் கேடுகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாத இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மலேசியா, போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில்தான் ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பதை (medicine) மருந்து என்று அழைக்கிறார்கள் ஆனால் மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் இவற்றை (drugs) போதைப் பொருள் என்றே அழைக்கிறார்கள். ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பது மருந்து அல்ல, நோயாளிகள் தன் நோயை உணராமல் இருப்பதற்காக கொடுக்கப்படும் போதைப் பொருட்கள் மட்டுமே.

ADR உருவாக்கும் உடல் தொந்தரவுகள்

ADR “Adverse drug reaction” அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள் என்பது, இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது உண்டாகும் பக்க விளைவாகும். ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாமல், சித்த, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருந்துகளுக்கும் இது பொருந்தும்.

உதாரணத்துக்கு ஒரு நீரிழிவு (இனிப்பு நீர்) நோயாளியை எடுத்துக்கொள்வோம். அவருக்கு இரத்த அழுத்தமும், அசதியும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மருத்துவர் அவரின் நீரிழிவுக்கு, இரத்த அழுத்தத்துக்கு, உடல் தெம்புக்கும், என்று மருந்து கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

மேலே கூறப்பட்ட எல்லா மருந்துகளும் இரசாயனங்களில் இருந்துதான் உருவாக்கப்படுகின்றன. எல்லா மருந்துகளும் தனி தனியே சோதிக்கப்படுகின்றன. உயிருக்கு ஆபத்து இல்லை என்று நிரூபிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மேலே உள்ள தொந்தரவுகளுக்கு மருத்துவர் குறைந்தது மூன்று முதல் ஐந்து மருந்துகள் வரையில் கொடுப்பார். அவர் கொடுக்கும் மருந்துகள் அனைத்துமே தனித்தனியாக சோதிக்கப் பட்டவை. தனித்தனியே சாப்பிடும் போது உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் இரண்டு மருந்துகள் என்பது வெவ்வேறு இரசாயனக் கலவைகளாகும். இரண்டு வெவ்வேறு இரசாயனக் கலவைகள் ஒன்றாக வயிற்றுக்குள் சென்றால் என்ன நடக்கும்? இது யாருக்கும் தெரியாது. மருந்து கொடுக்கும் மருத்துவருக்கும் தெரியாது. மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் தெரியாது.

இரண்டு வெவ்வேறு இரசாயனக் கட்டமைப்பு கூறுகள் (chemical components) ஒன்றாகச் சேரும்போது அது மூன்றாவதாக ஒரு விளைவை (reaction) உண்டாக்குகிறது. மூன்று, நான்கு, ஐந்து என மாத்திரைகள் அதிகரிக்கும் போது அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் விளைவுகளை யாராலும் கணிக்க முடியாது.

ஏ.டி.ஆரை புரிந்துகொள்ள ஒரு நடைமுறை உதாரணம்

தேநீரை தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும், காப்பியும் தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும். ஆனால் இரண்டையும் ஒன்று கலந்தால் என்ன ஆகும்? தேநீர், காப்பியுடன், ஹார்லிக்ஸ், கலந்தால் என்ன ஆகும்? அதன் சுவை எப்படி இருக்கும்?அதனுடன் பூஸ்ட் கலந்தால்? அதில் பெப்சி கலந்தால்? இந்த ஐந்து பானங்களின் கலவையை சற்று கற்பனை செய்துபாருங்கள். ஐந்து மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடும் போது இதுதான் உடலின் உள்ளே நடக்கிறது.

ஏ.டி.ஆர் உருவாக்கும் பக்கவிளைவுகள் எப்படி இருக்கும்?

இந்தக் கேள்விக்கு இந்த உலகில் யாராலும் பதில் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அது சரியானதாக இருக்கவும் முடியாது. ஐந்து வகையான மாத்திரையின் கலவையை பத்து நபர்களுக்குக் கொடுத்தால் அதன் விளைவு ஒரே மாதிரியாக இருக்காது, அதற்குக் காரணம், மருந்துகளின் விளைவு என்பது நோயாளியின் நோயின் தன்மை, உடல்வாகு, வாழ்க்கை முறைகள், உணவு முறைகள், மனப்பக்குவம் இப்படி பல விசயங்களைச் சார்ந்து மாறுபடும்.

இதனால்தான் சிலருக்கு இரசாயன மருந்துகள் ஒத்துப்போகின்றன சிலருக்குக் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இன்று உலகில் வினோதமான சில நோய்கள் தோன்றுவதற்கும் எ.டி.ஆர் தான் காரணம்.

ஏ.டி.ஆர் – எச்சரிக்கை

ஆங்கில மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கிய பிறகு உடலில் ஏதாவது தொந்தரவு புதிதாக உருவானால், அல்லது இருக்கின்ற தொந்தரவு அதிகரித்தால், அது நோயின் தாக்கம் அல்லது ஒவ்வாமை என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள், அல்லது மருத்துவர்கள் அவர்களை சமாதானப் படுத்துவார்கள். ஆனால் ஏன் அந்த மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய பிறகு இந்த புதிய தொந்தரவு உண்டானது என்று சிந்திக்கும் வரையில் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

நோய்களைக் குணப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தீராத நோய்களிலும், தீவிர நோய்களிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். பல ஆங்கில மருந்துகளை ஒன்றாக உட்கொள்ளும் போது மட்டுமின்றி, புட்டியில் அடைக்கப்பட்ட சித்த, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், போன்ற மருந்துகளை ஒன்றாக உட்கொள்ளும் போதும் இது போன்ற விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, நாம் அனுதினமும் பயன்படுத்தும் உணவுகளில் கலக்கப்படும் இரசாயனங்களும், அழகு சாதனப் பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும், மற்றும் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும் ஏ.டி.ஆரை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் இரசாயனங்களின் பயன்பாட்டைத் தவிர்த்துவிடுங்கள்.

இயற்கைக்குத் திரும்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field