தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்று பலர் எனக்குச் சரியான தூக்கம் இல்லை, தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறேன் என்று கூறுவதற்குக் காரணம் அவர்கள் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தன்னுடன் ஒரே வீட்டில் வாழ்பவர்கள் 10 மணி நேரம் தூங்கினால், தானும் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது முடியாத போது தனக்கு நோய் உள்ளதாக கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு 5 மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக உடல் தூங்காது. உடல் உழைப்புக்கும் சக்தியின் தேவைக்கும் ஏற்பவே தூக்கத்தின் அளவு மாறுபடும்.
காலையில் எழுந்திருக்கும் போது உடலில் வலியும் அசதியும் இருந்தால் அன்றைய இரவு உறக்கம் போதவில்லை என்று அர்த்தம். உடல் வலியும் அசதியும் இல்லாமல் இருந்தால் அன்றைய இரவு உறக்கம் சரியாக இருந்தது என்று அர்த்தம்.
1 Comment