நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் வாழ்ந்த காலத்தில் பல்வேறு போர்கள் நடைபெற்றன. அந்தப் போர்களில் பல நூறு பெண்கள் விதவையானார்கள், பல நூறு குழந்தைகள் அனாதை ஆனார்கள். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காலத்தில் ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக, உடல் வலிமையும், செல்வமும், அனைத்து மனைவிகளையும், மனைவியரின் குழந்தைகளையும், சமமாக நடத்தக்கூடிய பக்குவமும் உள்ள ஆண்கள் மட்டும் நான்கு பெண்கள் வரையில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்