தூங்கி எழும்போது எதனால் கண்களில் எரிச்சல் உண்டாகிறது?
காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் போது கண்களில் எரிச்சல் உண்டானால் முந்தைய இரவு நீங்கள் ஒழுங்காகத் தூங்கவில்லை என்று பொருளாகும்.
அன்றைய இரவு உறக்கம் உடலுக்கு போதவில்லை, போதுமான உறக்கம் இல்லாமல் பாதியில் எழுந்துவிட்டீர்கள், அல்லது தாமதமாக உறங்கச் சென்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இரவு நீங்கள் உறங்கும் போது உடல் செய்ய வேண்டிய கடமைகள் தடைப்பட்டுள்ளதால் உடல் அதனை கண் எரிச்சல் என்ற அறிகுறியாகத் தெரியப்படுத்துகிறது.