இருமல் என்பது நுரையீரலில் படிந்திருக்கும் பழைய காய்ந்த கழிவுகளை வெளியேற்ற உடல் பயன்படுத்தும் உத்தியாகும். கை கால்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளை அகற்ற நாம் கை கால்களை உதறுவதைப் போன்ற ஒரு செயல்தான் இருமல். நுரையீரலில் படிந்திருக்கும் காய்ந்த கழிவுகளை அகற்ற நுரையீரல் தன்னை தானே உதறிக் கொள்கிறது.
இருமலை உருவாக்கி அதன் மூலமாக நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றி – உருக்கி – சளியாக மாற்றி நுரையீரலிலிருந்து உடல் வெளியேறுகிறது.
இருமல் அதிகமாக இருந்தால் நுரையீரலில் கழிவு அதிகமாகச் சேர்ந்துள்ளது என்று பொருளாகும். நுரையீரலின் சளி வெளியேறிவிட்டால் இருமல் தானாகக் குணமாகிவிடும்.