எதனால் உறக்கம் குறைகிறது? இன்றைய காலகட்டத்தில் உறக்கம் தொடர்பான தொந்தரவுகளால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உறங்குவதில் சிரமம், உறக்கம் குறைவு, உறக்கத்தின் பாதியில் விழித்துக்கொள்வது, பகலில் உறக்கம் உண்டாவது, வேலைகளுக்கு இடையில் உறக்கம் வருவது என, பலருக்குப் பலவகையான தொந்தரவுகள். பெரும்பாலானோர், ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் போதை மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் உறக்கமின்றி, மன நிம்மதியும் இன்றி அவதிப்படுகிறார்கள். உறக்கம் தொடர்பான தொந்தரவுகளுக்கு உண்மையான காரணங்களை சிறிது ஆராய்வோம்?
உறக்கம் என்றால் என்ன?
உறக்கம் என்பது மனித உடலும், மனமும் சக்தியைப் புதுப்பித்து, சக்தி நிலையை சமன்படுத்தும் ஒரு ஓய்வு நிலை. மனிதர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான உறக்கத்தின் தேவை இருக்காது. உறக்கத்தின் தேவையும், அளவும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஒரு தனி நபருக்கு எவ்வளவு உறக்கம் தேவை என்பது அவர் உடலின் சக்தி நிலையையும், சக்தி உபயோகத்தையும், பொருத்து மட்டுமே அமையும்.
மனிதர்களின் உறக்கத்தின் கால அளவு
ஒவ்வொரு மனிதருக்கும் தேவைப்படும் உறக்கத்தின் அளவு, அவர் செய்யும் தொழில், வாழ்க்கைமுறை, உணவுமுறை, சிந்தனை, மனநிலை, உடலின் உழைப்பு, உடலின் ஆரோக்கியம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மாறுபடும். மூட்டைத் தூக்கும் தொழிலாளி, வாகன ஓட்டுநர், ஆசிரியர், வியாபாரி, அலுவலகத்தில் வேலை செய்பவர், இல்லத்தரசி, ஓய்வில் இருக்கும் முதியவர், இவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான உறக்கம் தேவைப்படுமா?
மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொருவரின் உடல் உழைப்பும் வெவ்வேறாக இருக்கும். அவர்களின் மனோசக்தியின் பயன்பாடும் மாறுபடும், உடலின் சக்தி செலவும் மாறுபடும். அதனால் அவர்களின் உடலின் அசதியும், சக்தி தேவைகளும் நிச்சயமாக மாறுபடும். இவ்வாறு உடலின் மற்றும் மனதின் சக்தி தேவைகள் மாறுபடும் போது அவர்களின் சக்தி உற்பத்தி அளவும் கட்டாயம் மாறுபடும். இதனால் தான் சிலருக்கு அதிகமாக உறக்கம் வருவதும், சிலருக்கு குறைவாக உறக்கம் வருவதுமாக இருக்கிறது.
எல்லோருக்கும் ஒரே அளவிலான உறங்கும் நேர அளவு இருக்காது. ஒருவருக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ, அவர் உடலுக்குத் தேவையான சக்தியை முழுமையாக உற்பத்தி செய்ய அந்த உடலுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ, அந்த அளவுக்குத்தான் உறக்கம் இருக்கும். நம் உடலின் தேவைகளுக்கு ஏற்ப உறக்கத்தின் அளவும், தன்மையும் மாறுபடும் என்பதை அறியாதவர்கள், ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு நம்மால் தூங்க முடியவில்லை என்றும், தனக்கு ஏதாவது நோய்கள் இருக்குமோ என்றும் அஞ்சுகிறார்கள். இந்த பயமே அவர்கள் மனதிலும் உடலிலும் புதிய தொந்தரவுகள் உருவாக காரணமாகிறது.
Leave feedback about this