எந்தச் சத்துக்கு என்ன சாப்பிட வேண்டும். ஒரு ஏழைப் பெண் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதோ வெறும் கஞ்சி, நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி கஞ்சியில் இருப்பது வெறும் கார்போஹைட்ரேட். ஒரு கர்ப்பமுற்ற ஏழைப் பெண்ணின் உடலுக்கு..
1. குழந்தையை வயிற்றில் உருவாக்க
2. குழந்தையை வயிற்றில் வளர்க்க
3. அந்த குழந்தையின் உடலில் உறுப்புகளை உருவாக்க
4. வயிற்றில் இருக்கும் குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்க தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைத்தன?
ஒரு குழந்தை உருவாக கால்சியம், மெக்னீசியம், ப்ரோடின், கொழுப்பு, உப்பு, சர்க்கரை, வைட்டமின்கள், தாது சத்து என பல சத்துக்கள் தேவைப்படும் அல்லவா? அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் தேவைப்படும் எல்லாச் சத்துக்களையும் கொடுத்தது யார்? எங்கிருந்து கிடைத்தது?
அந்தத் தாய் சாப்பிட்ட கஞ்சியில் இருந்தே அந்தத் தாயின் உடல் அனைத்தையும் சுயமாக உருவாக்கிக் கொண்டது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், நம்ப முடியாமலும் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. இன்றும் நம் இந்திய கிராமப்புறங்களிலும் , மற்ற ஏழை நாடுகளிலும், வெறும் கஞ்சியோ, கூழோ குடித்துவிட்டு ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.
எந்த உணவையும் தேர்ந்தெடுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை, உங்களுக்கு பிடித்தமானவற்றை சாப்பிடுங்கள் அது போதும். எந்த ஒரு சிறப்பு உணவும் தேவையில்லை. ஆனால் சாப்பிடும் வழிமுறை மட்டும் முக்கியம்.
சாப்பிடும் வழிமுறைகள்
1. பசியின்றி சாப்பிடக் கூடாது.
2. நன்றாகப் பசி வரும் வரையில் காத்திருக்க வேண்டும்
3. சாப்பிடும் போது அதிகமாக தண்ணீர் அருந்தக்கூடாது.
4. பசி அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
5. நன்றாகச் சுவைத்துச் சாப்பிட வேண்டும்
6. உணவின் சுவை மாறும் வரையில் மென்று விழுங்க வேண்டும்.
7. சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் அரைமணி நேரத்திற்கு தண்ணீர் அருந்தக்கூடாது.
2 Comments