மருத்துவம்

எனிமா எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள்

எனிமா எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள். எனிமா என்பது ஆசனவாய் மூலமாக வெந்நீரை மலக் குடலுக்குள் அனுப்பி, நாள்பட்ட மலங்களையும், இறுகிப்போன மலங்களையும், கரையச் செய்து, செயற்கையாக உடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையாகும்.

உடலில் தேங்கும் மலங்களும் கழிவுகளும் மனிதர்களுக்கு உண்டாகும் அனைத்து வகையான உடல் உபாதைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பதனால், இந்த வழிமுறை உடலில் தேங்கியுள்ள பழைய மலங்களை வெளியேற்றவும், நோய்களைக் குணப்படுத்தவும் மிகப் பெரும் உதவியாக இருக்கும்.

நாள்பட்ட உடல் உபாதைகள் உள்ளவர்கள், கொடிய நோய்கள் உள்ளவர்கள், அதிக உடல் பருமனாக உள்ளவர்கள், நாள்பட்ட மலச்சிக்கல், மூச்சு திணறல், மற்றும் தோல் நோய் உள்ளவர்கள், இந்த மருத்துவத்தை முயற்சி செய்துபாருங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். தினமும் மலம் கழிக்க கூடியவர்கள் இந்த மருத்துவத்தை செய்ய வேண்டாம்.

எனிமா பை ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இயற்கை மருந்துக் கடைகளிலும் இணையதளங்களிலும் எளிதாக கிடைக்கும். காலை வேளையில், சூரியன் உதித்த பிறகு ஒரு லிட்டர் வெதுவெதுப்பான வெந்நீரைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

கழிவறைக்கு வழக்கம் போல் மலம் கழித்துவிட்டு அறை மணி நேரம் கழித்து, எனிமா குழாயை ஆசன வாயின் மூலமாக உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். எண்ணெய், கிரீம், போன்ற போன்றவற்றைப் பயன்படுத்தினால் எளிதாக நுழையும்.

நின்றுக்கொண்டு, கால்களை ஒட்டிக்கொண்டு, எனிமா புட்டியில் தயார் செய்த வெதுவெதுப்பான வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி மலக் குடலுக்குள் செலுத்த வேண்டும். நீர் ஊற்றும் புட்டியை தூக்கி பிடித்துக்கொள்ள வேண்டும். நின்றுக்கொண்டு செய்வதைக் காட்டிலும் படுத்துக்கொண்டு எனிமா எடுப்பது இன்னும் சிறந்தது, அதிக நேரம் வெந்நீர் குடலில் தங்கும். குறைந்தது 15 நிமிடங்கள் தண்ணீரை வெளியேற விடாமல் அடக்கிக்கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் வரையில் வைத்திருக்கலாம்.

ஆசனவாய் மூலமாக உடலுக்குள் சென்ற வெந்நீர் பழைய மலங்களை இலகுவாக்கி, உடலை விட்டு வெளியேற உதவும். முதல் கட்டமாக மலம் வெளியேறியதும், மீண்டுமொரு முறை அதைப்போன்று செய்யலாம். இதைப்போன்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் பழைய மலங்களை வெளியேற்றலாம். மூன்று முறை செய்த பிறகு மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களும், நெஞ்சுச் சளி உள்ளவர்களும் அதிக நேரமும், அதிக முறைகளும் செய்யக் கூடாது.

ஒரே நாளில் அல்லது குறுகிய நாட்களில் மலங்களை வெளியேற்றிவிட வேண்டும் என்று எண்ணாமல், படிப்படியாக வெளியேற்ற வேண்டும். பல வருடங்களாக சேர்ந்த மலம் அதனால் அவசரப்படுவதில் அர்த்தமில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு எளிதாக மலம் வெளியேறுமானால், இந்த மருத்துவத்தை நிறுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு தேவைப்படும் நாளன்று மட்டுமே பயன்படுத்தலாம்.

அடிக்கடி எனிமா பயன்படுத்தக் கூடாது, உடல் அதற்குப் பழகி விட வாய்ப்புள்ளது. வருடத்தில் ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field