என்பது வயதானாலும் ஆண்மை குறையாது. மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை உடல் உறுப்புகளும் அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்தவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் பிறந்த நாள் முதலாக அவனது இறப்பு வரையில் அவனது உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் இயங்க வேண்டும், அவன் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டும்; இது இயற்கையின் நியதியாகும்.
அதனால் வயது அதிகரித்தால் உடலின் சக்தி குறையும், உடல் உறுப்புகள் பாதிக்கும், உள்ளுறுப்புகள் செயலிழக்கும் என்பதெல்லாம் தவறான கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும் மட்டுமே. இந்தக் கருத்து உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஏன் சில ஆண்களுக்கு ஆண்மை வீரியக் குறைபாடு உண்டாகிறது என்பதை விளக்க வேண்டும் அல்லவா? அதற்கான காரணங்களைப் பார்ப்போம். ஆண்மை குறைபாடுகள் உண்டாக சில முக்கியமான காரணங்கள்.
மனதின் சமமின்மை – மனதில் உண்டாகும் பயம், கவலை, துக்கம், எரிச்சல், குழப்ப போன்ற உணர்வுகள் ஆண்மையைப் பாதிக்கும்.
தவறான உணவு முறை – பதப்படுத்திய உணவுகளை அதிகமாக உட்கொள்வதும், அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வதும் ஆண்மையைப் பாதிக்கும்.
இரசாயனப் பயன்பாடு – உணவுகளில் கலந்திருக்கும் இரசாயனங்களும், மருந்து மாத்திரைகளில் கலந்திருக்கும் இரசாயனங்களும் ஆண்மையைப் பாதிக்கும்.
புகையிலை புகைப்பது, மதுபானம் அருந்துவது போன்ற தீயப் பழக்கங்கள் ஆண்மையைப் பாதிக்கும்.