ஆரோக்கியம்

என் மகளும் தடுப்பூசியும்

என் மகளும் தடுப்பூசியும். சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியா அரசாங்க மருத்துவமனையில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ஒரு தாதி இணைந்திருந்தார். அவர் என்னிடம் நீங்கள் அலிஷாவின் தந்தையா என்று கேட்டார். நானும் ஆம் என்றேன். நீங்கள் உங்கள் மகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டாம் என்று கடிதம் கொடுத்தீர்களே ஏன் என்று கேட்டார்.

தடுப்பூசி மருந்துகளில் உடலுக்கு ஒவ்வாத பல விசயங்கள் இருக்கின்றன அதனால் என் மகளுக்கு தடுப்பூசி போடக்கூடாது என்று கூறினேன். அதற்கு அவர் தடுப்பூசி உடலுக்கு நன்மையானது தடுப்பூசி தீமையானது, கேடானது என்ற வதந்திகளை நம்பாதீர்கள், உங்கள் மகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

நான் மீண்டும் முடியாது என்று மறுப்பு கூறினேன். நீங்கள் என்ன மருத்துவரா? தடுப்பூசி தீமை செய்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று எதிர்க்கேள்வி கேட்டார். நான் அவரிடம் சரி தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன்; ஆனால் தடுப்பூசி எதிலிருந்து செய்கிறார்கள் என்று எனக்கு விளக்குங்கள் என்றேன்.

அதற்கு அவர் பதில் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருந்தார். எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என்று கூட தெரியாத ஒரு விஷயத்தை நல்லது என்று நீங்கள் எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தார். அவர் மீண்டும், உங்கள் மகள் ஒரு கடிதம் கொண்டுவருவார் அந்தக் கடிதத்தில் உள்ள மருத்துவரைச் சென்று காணுங்கள் என்றார். நானும் சரி என்றேன்.

சில நாட்கள் கழித்து ஒருநாள் என் மகள் பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வந்தார். சில நாட்கள் கழித்து நானும் அந்த மருத்துவரைச் சென்று கண்டேன். அந்த மருத்துவரும் அந்த தாதி கூறியதைப் போலவே தடுப்பூசி மிக நன்மையானது என்று விளக்க ஆரம்பித்து கூறிக்கொண்டே இருந்தார். நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அந்த மருத்துவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

டாக்டர் இந்த தடுப்பூசி எதிலிருந்து தயாரிக்கிறார்கள்? என்று கேட்டேன். அந்த மருத்துவர் ஏறத்தாழ ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். திருதிருவென்று முழித்துவிட்டு கூகுள் செய்து பாருங்கள் அதில் விரிவாகப் போட்டிருப்பார்கள். நான் மறந்து விட்டேன் என்றார். நான் அவரிடம் மூலப்பொருள் என்ன? எதிலிருந்து தயாரிக்கிறார்கள்? என்று கூட தெரியாத ஒரு விஷயத்தை என் மகளுக்கு செலுத்தச் சொல்கிறீர்களா? என்றேன்.

உடனே அவர் தடுப்பூசி கிருமிகளிலிருந்து தயாரிக்கிறார்கள் என்றார். அது என்ன கிருமி? அந்தக் கிருமிகளை எவ்வாறு உருவாக்குகிறார்கள்? என்றெல்லாம் அவரிடம் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் தடுப்பூசியில் 30 மில்லிகிராம் மருந்து போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அதில் 5 மில்லிகிராம் கிருமிகள் இருக்கலாம் மீதமுள்ள 25 மில்லிகிராமில் என்ன இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் தடுப்பூசியில் உள்ள அனைத்துமே நல்ல விஷயங்கள்தான் ஆனால் அவை என்னவென்று தெரியவில்லை என்றார்.

நான் அந்த மருத்துவரிடம் கூறினேன், நீங்கள் தடுப்பூசியின் கேடுகளையும், தடுப்பூசி வியாபாரத்தையும், அதனால் விளையும் பக்க விளைவுகளைப் பற்றியும், நிறைய இணையப்பக்கங்கள் இருக்கின்றன. அவற்றை சென்று வாசியுங்கள் என்றேன். உடனே அவர் எனக்கு அவற்றையெல்லாம் அறிந்துகொள்ள ஆர்வமில்லை என்று கூறிவிட்டு பழைய ரெக்கார்டை போட ஆரம்பித்தார். தடுப்பூசி போடுதல் நல்லது என்றார்.

நான் இறுதியாகவும் உறுதியாகவும் கூறிவிட்டேன் . என் மகளுக்கு தடுப்பூசி போட முடியாது என்று. அவர் கொடுத்த பாரங்களைப் பூர்த்தி செய்து கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு வந்து விட்டேன். வெளியேறும் போது மீண்டும் அந்த மருத்துவர் கூறினார்; நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று.