வீட்டு மருத்துவம்

எலும்பு முறிவுக்கு வீட்டு மருத்துவம்

எலும்பு முறிவுக்கும், மூட்டு வலிகளுக்கும், எலும்பு தொடர்பான கோளாறுகளுக்கும் இந்த மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம். எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், விரைவில் தொந்தரவுகள் குணமாகும்.

இலங்கையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் ஒருவர் இந்த மருத்துவத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார். இலங்கையில் இனப்பிரச்சனைகள் நடைபெற்ற போது சிங்கள இராணுவத்தால் அடித்துத் துன்புறுத்தப்படும் தமிழ் இளைஞர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படும் வேளைகளில் இந்த மருத்துவம் மிகவும் உதவியாக இருந்ததாகச் சொன்னார். நெஞ்சு எலும்பு உடைந்தால் கூட விரைவாக கூடிவிடுமாம்.

எலும்பு முறிவு மற்றும் எலும்பு பலவீனத்துக்கு மிகவும் பயன்படும். முதுகு தண்டு கோளாறினால் நடமாட முடியாமல் வலியால் கஷ்டப்பட்ட ஒருவருக்கு இந்த மருத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற எலும்பு சம்பந்தமான கோளாறுகளுக்கும் பயன்படுத்திப் பார்த்து அதன் விளைவை தயவு செய்து கீழே பதிவு செய்யவும்.

தேவையான பொருட்கள்

  1. ஒரு பெரிய தேங்காய் மூடி
  2. ஒரு நாட்டுக் கோழி முட்டை
  3. ஒரு கரியபவளம்
  4. சிறிது – புனுகு / மரப்பிசின்
  5. ஒரு மென்மையான பல் துலக்கும் புரூஸ்

மருந்தைத் தயார் செய்யும் முறை

தேங்காய் மூடியை இரண்டு மூன்று நாட்களுக்கு நன்றாக வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும்.

காய்ந்த தேங்காய் மூடியின் உட்புறத்தில், ஒட்டி இருக்கும் தோல் மற்றும் பட்டையை உணவு உட்கொள்ளும் கரண்டியால் நன்றாகச் சுரண்டி எடுத்துவிட வேண்டும்.

நன்றாக வழுவழுவென இருக்கும் தேங்காய் மூடியின் உள்ளே

  • ஒரு நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக்கரு
  • ஒரு கரியபவளம்
  • சிறிதளவு புனுகு அல்லது மரப்பிசின் (50-100 கிராம்)

சேர்த்து, பல் துலக்கும் புரூசால் நன்றாகக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

மருத்துவம் செய்யும் வழிமுறை

இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் வலி / முறிவு / மூட்டு தேய்மானம் உள்ள எலும்பு பகுதிகளில். கைபடாமல் பல் துலக்கும் புருசை கொண்டு, இந்த மருந்தை தடவி, காய விட வேண்டும். இந்த மருந்தை குணமாகும் வரையில் தினமும் தேய்த்துவர வேண்டும்.

மருந்து முடிந்துவிட்டால், எது முடிந்து விட்டதோ (முட்டையின் வெள்ளைக்கரு, புனுகு, கரியபவளம்) அதை மட்டும் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் மூடியை மாற்றவோ கழுவவோ தேவையில்லை.

எலும்பு சம்பந்தமான தொந்தரவுகளுக்கு. இது அருமருந்து. மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.