ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?

Photo of Artwork on White Wall

ஈர்ப்பு விதி என்பது என்ன?

ஈர்ப்பு விதி (The law of attraction) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சூட்சும ஆற்றல் அல்லது வழிமுறை தான் ஈர்ப்பு விதி என்று அழைக்கப்படுகிறது.

ஈர்ப்பு விதி இருப்பது உண்மைதான் ஆனால் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தான் இப்போது பிரச்சனை, ஆளுக்கு ஒரு மாதிரியாகச் சொல்கிறார்கள். பெரும்பாலும் நினைத்தால் நடக்கும், ஆசைப்பட்டால் நடக்கும், கற்பனை செய்தால் கிடைக்கும், கனவு கண்டால் நடக்கும், என்பதுதான் பெரும்பாலோர் கூறும் ஈர்ப்பு விதி சட்டமாக இருக்கிறது.

நினைப்பதும் ஆசைப்படுவதும் உண்மையில் நடக்கத் தொடங்கினால், இந்த உலகமே தலைகீழாக இருந்திருக்கும். இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் அரசனைப் போல் அல்லவா வாழ்ந்திருப்பான். செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் வேண்டாத மனிதர்கள் உண்டா? அத்தனை மனிதர்களும் அரசர்களைப் போன்ற வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தால் மட்டுமே, ஆசைப்பட்டால், கற்பனை செய்தால் கிடைக்கும் என்பது உண்மையாக இருக்கும்.

நிஜ வாழ்க்கையில் முயற்சி செய்பவர்களும், உழைப்பவர்களும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவர்களும் மட்டுமே முன்னேறுகிறார்கள்.

பசியோடு உறங்கச் செல்லும் மனிதர்களின் அடிப்படைத் தேவையே உணவு மட்டும் தான்.ஆனால் அதைக் கூட அவர்களால் அடைய முடியாமல் போகிறது. ஏழைகளின் கனவு பணம், பலருக்கு கனவாகவே போகிறது. இறுதிவரை வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி தேவை, ஆனால் அது பலருக்குக் கிடைப்பதே இல்லை. அப்படியானால் ஈர்ப்பு விதி என்றால் என்ன? ஈர்ப்பு விதி என்பது உண்டா இல்லையா? ஒருவேளை இருந்தால் அது எவ்வாறு செயல்படுகிறது?

அடுத்த கட்டுரையில் தொடரும்…

X