தியானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை. தியானம் என்பது மனிதர்களின் இயல்பான தன்மை அதனால் தியானத்திற்கு என்று தனியாக எந்த கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் கிடையாது. ஆனால் தியானம் எளிதாகவும் இயல்பாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக பின்வரும் வழிகாட்டுதல்கள்.
1. உணவை உட்கொண்ட உடனே தியானம் செய்யக் கூடாது.
2. காலியான வயிற்றில் அல்லது உணவை உட்கொண்டு இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு தான் தியானம் செய்ய வேண்டும்.
3. வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்யக் கூடாது. தரையில் பாய், கம்பளி, கடினமான துணி போன்றவற்றை விரித்து, அதன் மீது அமர வேண்டும்.
4. உடலில் உஷ்ணம் அதிகமாக இருந்தாலோ, மலச்சிக்கல் இருந்தாலோ அதிக நேரம் தியானம் செய்யக் கூடாது,
5. தளர்வாகவும் அமைதியாகவும் அமர்ந்துகொண்டு தியானம் செய்ய வேண்டும்.
6. தியானத்தின் போது உடலும் முதுகெலும்பும் நேராக இருக்க வேண்டும்.
7. தியானத்தை மூச்சுப் பயிற்சியுடன் தொடங்க வேண்டும்.
8. தியானத்தின் போது சிந்தை முழுவதும் மூச்சுக் காற்றின் மீது இருக்க வேண்டும்.
9. நல்லதாகவோ தீயதாகவோ என்ன சிந்தனை உதித்தலும், அதனை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ, பதில் சொல்லவோ கூடாது.
10. ஒரு பார்வையாளரைப் போன்று அமர்ந்துக் கொண்டு மூச்சையும் சிந்தனையைக் கவனிக்க மட்டும் வேண்டும்.
Leave feedback about this