நோய்கள்

சர்க்கரை நோய்க்கு முழுமையான விளக்கம்

தலைப்புகள்

ஒரு காலத்தில் மனித இனத்திற்கான சேவையாகவும், இறைத் தொண்டாகவும் கருதப்பட்ட மருத்துவம், ஆங்கில மருத்துவத்தின் வருகைக்குப் பிறகு முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வர்த்தகமாக மாறிவிட்டது. ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாமல், மற்ற மருத்துவ முறைகளும், இன்று வணிகமாக மாறிவிட்டன. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

மருந்து கம்பெனி முதலாளிகள் பணம் பண்ணுவதற்காக ஆரோக்கியமான மனிதர்களும் நோயாளிகளாக மாற்றப்படுகிறார்கள். இனிப்புநீர், நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் உடலின் சர்க்கரை அளவு அதிகரிப்பு, உண்மையில் ஒரு நோயே அல்ல. வணிக நோக்கத்துக்காக மருந்து கம்பெனிகள், ஆரோக்கியமான மனிதர்களின் மனதில் பயத்தை உருவாக்கி, நோயாளிகளாக மாற்றுகிறார்கள். சர்க்கரை நோய் மட்டுமல்ல, இரத்தக் கொதிப்பு, இரத்தச் சோகை, சத்து பற்றாக்குறை, எய்ட்ஸ், அல்சர், காய்ச்சல், இன்னும் பல நோய்களைக் குறிப்பிடலாம். “Man made diseases” என்று இணையத்தில் தேடினால் இவை தொடர்பாக பல கட்டுரைகளை வாசிக்கலாம்.

சர்க்கரை நோய் / இனிப்புநீர்

இன்று சர்க்கரை நோய் இல்லாத பெரியவர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, இந்த நோய் அனைவரிடத்திலும் காணப்படுகிறது. வயது நாற்பதைத் கடந்துவிட்டால் கண்டிப்பாக சர்க்கரை நோய் உருவாகும் என்று அனைவரும் நம்புகிறார்கள். அல்லது மருத்துவர்கள் (வியாபாரிகள்) மற்றும் மீடியாக்களால் நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள்.

சர்க்கரை நோய் என்பது ஒரு கொடிய நோய், பரம்பரை நோய், மருந்து சாப்பிட்டால் தான் கட்டுக்குள் இருக்கும் என்று அனைவரும் நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் மருந்து மாத்திரைகள் உட்கொண்டு குணமான ஒரு சர்க்கரை நோயாளியைக் கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆங்கில (இரசாயன) மருந்துகளை உட்கொள்வார்கள் காரணம் பயம்.

பயமும் ஆசையுமே இன்றைய வியாபாரிகளின் யுக்தி

இன்று உங்கள் இல்லத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டப்படும் விளம்பரங்களைக் கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கள். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் இரண்டே வகைதான் ஒன்று ஆசையைத் தூண்டும் விளம்பரங்கள் மற்றொன்று பயத்தைத் தூண்டும் விளம்பரங்கள்.

இவ்விரு வியாபாரத் தந்திரங்களையும் இன்றைய ஆங்கில மருத்துவம் மிகத் திறமையாக கையாண்டு மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இன்று நீங்கள் ஆங்கில மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் இரண்டு விசயங்கள் தான் செய்வார்கள் ஒன்று நோயைப்பற்றிய பயத்தை உண்டாக்குவார்கள் அல்லது ஆரோக்கியத்தைப் பற்றிய ஆசையை உண்டு பண்ணுவார்கள்.

சாமானியன் எவ்வாறு நோயாளியாக மாற்றப்படுகிறான்?

(Diabetes) சர்க்கரை நோய், என்பது ஒரு நோயல்ல, வியாபாரம்…! பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளைக் கேட்டால், அவர்கள் யாரோ ஒரு மருத்துவரால் தான் சர்க்கரை நோயாளியாக மாற்றப்பட்டு இருப்பார்கள். உதாரணத்துக்கு, பிரசவத்துக்குச் சென்ற பெண்கள், விபத்துக்குள்ளானவர்கள், மற்ற நோய்களுக்காக மருத்துவம் செய்யச் சென்றவர்கள், வருடப் பரிசோதனைக்குச் சென்றவர்கள், இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டவர்கள், இரத்தப் பரிசோதனை செய்தவர்கள்; என சர்க்கரை நோயினால் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்தவர்களை, சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரைக் குத்தி; வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வற்புறுத்துவார்கள் மருத்துவ வியாபாரிகள்.

சரி அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உட்கொண்டால் நோய் குணமாகிவிடுமா? என்றால் அதுவும் குணமாகாது. அப்புறம் எதற்கு மாத்திரைகளை உட்கொள்ளச் சொல்கிறார்கள்? பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்துடன் தான், எந்த நோயும் இல்லாத அப்பாவி மக்கள் நோயாளிகளாக மாற்றப்படுகிறார்கள்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது ஏன்?

அது சரி அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால், மேலே குறிப்பிட்ட நபர்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்தது ஏன்? இதற்குப் பதில் சொல்ல வேண்டும் அல்லவா.

மனித உடல் இயங்குவதற்கு சர்க்கரை மிகவும் அவசியமானது. சர்க்கரை குறையும் போது உடல் தளர்வடைவதும், மயக்கம் உண்டாவதும் இதற்கு அத்தாட்சி. ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய சரியான சர்க்கரையின் அளவு என்று, எதுவுமே கிடையாது. சராசரி என்று இல்லாத ஒன்றைக் கூறி மக்களைப் பயமுறுத்துகிறார்கள். ஒவ்வொரு உடலின் தன்மைக்கு ஏற்பவும் சர்க்கரை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

கர்ப்பம் தரித்த பெண்கள், நோய் கண்டவர்கள், உடல் உபாதை உள்ளவர்கள், விபத்துக்குள்ளானவர்கள், முதியவர்கள் போன்றோருக்கு உடலின் நன்மைக்காகவே சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நோயைக் குணப்படுத்த, உடலின் ஆற்றலை அதிகரிக்க, சர்க்கரை மிக அவசியம். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சர்க்கரை நோயாளிகளை உருவாக்குகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டவர்கள் எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாவிட்டால் உடலில் சர்க்கரை அதிகரித்ததின் நோக்கம் நிறைவேறியவுடன் சர்க்கரையின் அளவு சுயமாகவே குறைந்துவிடும். சர்க்கரையின் அளவை அதிகரிக்க தெரிந்த உடலுக்கு திரும்பவும் குறைக்க தெரியாதா? சர்க்கரையை அதிகரித்ததும் அதை மீண்டும் குறைக்கும் வேலையை செய்வதும் நோயெதிர்ப்பு சக்திதான் (Immune System).

பாதுகாப்பான சர்க்கரை அளவு

ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தன்மையுடைய உயிராக இருக்கிறான். அவனது உடல் அமைப்பு, உணவு முறை, தொழில், வாழும் சூழ்நிலை, வாழ்க்கை முறை, மனநிலை, அனைத்தும் மாறுபட்டவையாக இருக்கும் போது, எவ்வாறு ஒரே அளவிலான சர்க்கரை, ஒரே அளவிலான இரத்த அழுத்தம் அனைவருக்கும் இருக்க முடியும்? புரிந்துகொள்ளுங்கள், இவை வெறும் வியாபாரம் மட்டுமே. இந்த மருத்துவ வியாபாரிகளிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

ஆங்கில மருத்துவம் கூறும் நீரிழிவு நோயின் காரணங்கள்

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் ஆங்கில மருத்துவர்களிடம் சென்று, நீரிழிவு நோய் எதனால் உருவாகிறது என்று கேட்டால் அவர்கள் கூறும் காரணங்களில் சில. தாய் தந்தை மரபணுவில் இருந்து வந்திருக்கும், பரம்பரை நோயாக இருக்கும், பான்கிரியாஸ் வேலை செய்யவில்லை, பான்கிரியாஸ் பழுதடைந்துவிட்டது,
மன அழுத்தம்.

நீரிழிவு நோயைப் பற்றிக் கூறும் போது ஆங்கில மருத்துவர்கள் கூறுகிறார்கள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் ஆனால் அதைக் குணப்படுத்த முடியாது; இந்நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று. ஆனால் உண்மை என்னவென்றால் குணப்படுத்த முடியாத நோய் என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது.

ஆங்கில மருத்துவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், உண்மையானவர்களாக இருந்தால், அவர்கள் என்ன கூற வேண்டும் தெரியுமா? உங்கள் நோயை எங்களுக்குக் குணப்படுத்தத் தெரியவில்லை, மற்ற மருத்துவங்களில் முயற்சி செய்து பாருங்கள் என்று தானே கூற வேண்டும்? ஆனால் அவர்கள் அவ்வாறு கூற மாட்டார்கள், காரணம் மருந்து கம்பெனிகளின் கட்டளை.

குணப்படுத்தாது என்று தெரிந்தும், பல பக்கவிளைவுகளை உருவாக்கும் என்று தெரிந்தும், புதிய நோய்களை உருவாக்கும் என்று தெரிந்தும், இரசாயன மருந்துகளை உட்கொள்ளச் சொல்வார்கள்.

நீரிழிவு நோய் எதனால் உருவாகிறது?

ஆங்கில மருத்துவத்தில் நீரிழிவு நோயைக் குணப்படுத்த இயலாமைக்குக் காரணம், அவர்களுக்கு நீரிழிவு நோய் எதனால் உருவாகிறது என்பது தெரியவில்லை. அதனால் அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்பதும் தெரியவில்லை. நீரிழிவு நோய் எதனால் உருவாகிறது என்று பார்த்தால், இந்நோய் உருவாக பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை. நீரிழிவு நோய் என்பது சாதாரண செரிமானக் கோளாறுதான். இந்த சாதாரண செரிமானச் சீர்கேட்டைத் தான் பெரிய பூதாகரமான நோயாகக் காட்டி பயமுறுத்தி வியாபாரம் செய்கிறார்கள். நீரிழிவு நோய் என்பது வெறும் வியாபாரமே நோயல்ல.

நீரிழிவு நோய் எவ்வாறு உருவாகிறது? உடலின் சர்க்கரை அளவு எதனால் அதிகரிக்கிறது? உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் சில.

1. செரிமான உறுப்புகளில் இயக்க குறைபாடு உண்டாகும் போது, செரிமானம் முறையாக நடைபெறாமல் போகிறது. அதனால் செரிமானத்துக்குப் பின்னர் உருவாகும் சர்க்கரை, தரம் குறைந்த சர்க்கரையாக உருவாகி, உடலால் நிராகரிக்கப்பட்டு இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

2. மனம் நிம்மதியாக இல்லாத போது செரிமானம் முறையாக நடக்காமல், கெட்ட சர்க்கரைகள் உருவாகலாம்.

3. செரிமானம் முறையாக நடக்காததால் உருவான கெட்ட சர்க்கரை உடலில் கலந்தால் தீங்கை விளைவிக்கும் என்பதால் பான்கிரியாஸ் இன்சுலினை சுரப்பதில்லை.

4. சிறுநீரகத்தின் ஆற்றல் குறைவாக இருக்கும் போது உடலால் பயன்படுத்த முடியாத கெட்ட சர்க்கரையை உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியாமல், உடலின் உள்ளேயே தேங்கிவிடுகிறது. உடலின் ஆற்றல் அதிகரிக்கும் போது உடல் சுயமாக தேவையில்லாத சர்க்கரைகளை வெளியேற்றிவிடும்.

இதைப் புரிந்து கொள்ளாமல் சிறுநீரில் சர்க்கரை இருக்கிறது அதனால் அவர் சர்க்கரை நோயாளி என்று மருத்துவர் கூறுவார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உருவாகும் பக்கவிளைவுகள்

உடலுக்கு ஒவ்வாத கெட்ட சர்க்கரை உடல் உறுப்புகளில் சேரும்போது நோய்களை உருவாக்கும், சேரும் உறுப்பைச் சிதைத்துவிடும். இதனால் தான் உடல் இந்த சர்க்கரையை நிராகரிக்கிறது சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது. ஆனால் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில இரசாயன மருந்துகளும், இன்சுலின்களும்; உடலால் நிராகரிக்கப்பட்ட கெட்ட சர்க்கரைகளை உடலின் செல்களிலும், உள்ளுறுப்புகளிலும், உடலின் மற்ற பாகங்களிலும் வற்புறுத்தித் திணிக்கின்றன. இவ்வாறு உடலின் அனுமதியில்லாமல், உடலின் அறிவைக் கெடுத்து, மருந்துகளால் வற்புறுத்தித் திணிக்கப்பட்ட கெட்ட சர்க்கரைகளே எல்லா பக்க விளைவுகளுக்கும் மூல காரணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் அனுபவிக்கும் அனைத்து தொந்தரவுகளுக்கும் இரசாயனங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. இரசாயனங்கள் உணவாகவோ, பானமாகவோ, மருந்தாகவோ, பயன்பாட்டுப் பொருட்களாகவோ உடலில் கலக்கும் போது உடலில் தொந்தரவுகளை உருவாக்குகின்றன.

கெட்ட சர்க்கரை கலக்கும் உறுப்பில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்கும்.

1. கெட்ட சர்க்கரை கலக்கும் செல்கள் கெட்டுவிடும்.
2. தோலில் கலந்தால் தோல் நோய், புண்கள் உண்டாகும்.
3. ஆணுறுப்பில் கலந்தால் ஆண்மை கெட்டுவிடும்.
4. கர்ப்பப்பையில் கலந்தால் கர்ப்பப்பை கெட்டுவிடும்.
5. சிறுநீரகங்களில் கலந்தால் சிறுநீரகங்கள் கெட்டுவிடும்.
6. இருதயத்தில் கலந்தால் இருதயம் கெட்டுவிடும்.

இப்படி உடலால் நிராகரிக்கப்பட்ட கெட்ட சர்க்கரை எந்த உறுப்பில் கலந்தாலும், அந்த உறுப்பைக் கெடுத்து, நோய்களை உருவாக்கும் ஜாக்கிரதை.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த என்ன சாப்பிட வேண்டும் பலர் என்னிடம் கேட்பார்கள், உண்மை என்னவென்றால்; சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகாது, சாப்பிடுவதை நிறுத்தினால் தான் நீரிழிவு நோய் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மூலிகை மருந்துகள் கூட பெரிய நன்மையையோ பெரிய மாற்றத்தையோ தந்துவிடாது. காரணம் நீரிழிவு நோயாளிகள் மூலிகை மருந்துகளை உட்கொண்டாலும் மருந்துகளை ஜீரணிக்கும் சக்தியும், அந்த மருந்தைச் செரித்து உடலில் கலக்கும் சக்தியும் உடலுக்கு இருக்காது. பட்டினியாக இருப்பது மட்டுமே நிரந்தரத் தீர்வை தரும்.

நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் வழிமுறைகள்

1. உணவைக் குறைவாக உண்ணுங்கள்.

2. பசித்தால் மட்டும், பசியின் அளவுக்கு உண்ணுங்கள்.

3. இரவில் பட்டினியாக படுக்கைக்குச் செல்லுங்கள்.

4. இனிப்பான பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

5. சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாதீர்கள்.

6. தாகமின்றி தண்ணீர் அருந்தாதீர்கள்.

7. தண்ணீரை சிறிது சிறிதாக அருந்துங்கள்

8. இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் செல்லுங்கள்.

9. மனதைத் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

10. எந்த இரசாயனம் கலந்த மருந்துகளையும் உட்கொள்ளாதீர்கள்.

11. புட்டியில், பைகளில் அடைக்கப்பட்ட, இரசாயனம் கலந்த உணவு மற்றும் பானங்களை அறவே
தவிர்த்துவிடுங்கள்.

12. தூய வெள்ளை நிற உணவுகளை தவிர்த்துவிடுங்கள். எ.கா: சீனி, தூள் உப்பு, அஜினாமோட்டோ, மைதா, மாவுகள்.

13. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

மறுபடியும் சொல்கிறேன், எந்த ஆங்கில மருந்தும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தாது, உங்கள் உடலால் மட்டுமே நோய்களைக் குணப்படுத்த முடியும். பசி இல்லாமல் உண்ணாதீர்கள். உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். பசியை உணர்ந்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

அற்றால் அறவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

குறள் 943

குறளின் உரை
தினசரி வாழ்க்கைமுறை, செய்யும் தொழில் இவற்றுக்குத் தேவைப்படும் உடலின் சத்துக்களையும் ஆற்றலையும் அறிந்து. அந்த உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதே, இந்த உடல் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உதவும் வழியாகும்

1 Comment

  • DR S PALANISAMY January 20, 2024

    உண்மையா பதிவு உபயோகமுள்ள பதிவு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X