தானத்துக்கும் தர்மத்துக்கும் என்ன வித்தியாசம்?
நம்மிடம் இருக்கும் பொருளை, நம்மிடம் அதிகமாக இருப்பதனால் மற்றவர்களுக்கு கொடுத்தால் அது தானம். அதாவது மற்றவர்களுக்கு தேவை உள்ளதோ இல்லையோ நமது தேவைக்கும் அதிகமாக இருக்கும் ஒரு பொருளை அல்லது பணத்தை மற்றவர்களுக்கு வழங்கினால் அது தானம்.
தேவைப்படுவோருக்கு குறிப்பிட்ட தேவைப்படும் பொருளைக் கொடுத்தால் அது தர்மம். அதாவது பசியோடு இருப்பவருக்கு உணவு, தாகத்தோடு இருப்பவருக்கு தண்ணீர், ஆடை தேவைப்படுவோருக்கு ஆடை என்று தேவை உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருளை வழங்குவது தர்மம்.
உதாரணத்துக்கு: வழிப்பாட்டு தலங்களுக்கு வழங்குவது தானம். அதன் வாசலில் யாசகம் கேட்பவர்களுக்கு வழங்குவது தர்மம்.