கிரிப்டோ கரன்சி பற்றிய சில முக்கியமான விவரங்கள். கிரிப்டோ கரன்சிகள் உலகத்தின் போக்கையே மாற்றி விடப் போகிறான், இனிமேல் உலகம் முழுமைக்கும் (bitcoin) பிட்காயின் தான் பயன்பாட்டில் இருக்கப் போகிறது என்பதைப் போன்ற மாயைகளை சிலர் உருவாக்க முயல்கிறார்கள்.
தங்கம், வெள்ளி, நாணயம், பணம், காசு, காசோலை, கடன் அட்டை, மின் பரிவர்த்தனை அட்டை, மின்னியல் பணமாற்று முறைகளைப் போன்று கிரிப்டோ கரன்சியும் ஒருவகையான பணப் பரிவர்த்தனை முறை அவ்வளவுதான். கிரிப்டோ நாணயங்களைப் பயன்படுத்தி எல்லையில்லாமல் அத்தனை நாடுகளுக்கும் பணம் அனுப்பலாம் பெறலாம், அவற்றைப் பயன்படுத்த கட்டுப்பாடுகளோ எல்லைகளோ கிடையாது; இவைதான் இவற்றின் சிறப்புகள்.
கிரிப்டோ நாணயங்கள் மிகவும் பாதுகாப்பானவை, லாபம் தரக்கூடியவை, கிரிப்டோ நாணயங்களைப் பயன்படுத்த எந்த சேவைக் கட்டணமும் கிடையாது என்றும், அவை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் கதைகளை அளந்துவிடுவார்கள், அவை அனைத்தும் வியாபார நோக்கத்துக்காக கூறப்படும் பொய்களே.
கிரிப்டோ நாணயங்களை (Cryptocurrency) பற்றிய சில முக்கியமான விவரங்கள்
1. கிரிப்டோ நாணயங்கள் உலகத்தை மாற்றப் போவதில்லை.
2. கிரிப்டோ நாணயங்களை எல்லா இடத்திலும் பயன்படுத்த முடியாது.
3. அனைத்து கிரிப்டோ நாணயங்களுக்கும் சந்தை மதிப்பு இருக்காது.
4. கிரிப்டோ நாணயங்களை வாங்கவும் விற்கவும் சேவைக் கட்டணம் விதிக்கப்படும்.
5. தவறான கிரிப்டோ நாணயங்களை வாங்கிவிட்டால் இறுதிவரையில் அவற்றைப் பயன்படுத்தவும், மாற்றிக் கொள்ளவும், விற்பனை செய்யவும் முடியாது.
6. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அல்லது சரியான தரப்பினரால் வெளிப்பட்ட நாணயங்களுக்கு மட்டுமே மதிப்பும் விலையும் இருக்கும்.
7. கிரிப்டோ நாணயம் என்ற பெயரில் பொய்யான நாணயங்கள் அதிகம் உள்ளன.
8. அறவே சந்தை மதிப்பு இல்லாத கிரிப்டோ நாணயங்கள் நிறைய உள்ளன.
9. கிரிப்டோ நிறுவனம் என்ற பெயரில் நிறைய பொய்யான இணையதளங்களும் உள்ளன.
10. எச்சரிக்கையாக இருக்காவிட்டால் மொத்த முதலீடும் கரைத்து விடும்.
11. கிரிப்டோ நாணயத்தை தவறுதலாக வேறு நபர்களுக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்பப் பெற முடியாது.
12. உங்களுக்கு யார் கிரிப்டோ அனுப்புகிறார்கள் அல்லது நீங்கள் யாருக்கு கிரிப்டோ அனுப்புகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்காது.
13. ஒருவர் அனுப்பி மற்றவருக்குக் கிடைக்கவில்லை என்றால் அந்த கோயின்களை தேடி மீட்பது கடினம்.
14. உங்களின் கிரிப்டோ வாலெட் விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால் உங்களுக்குத் தெரியாமலேயே வாலெட்டில் இருக்கும் மொத்தத் தொகையையும் திருடிவிட முடியும்.