கிரிப்டோ கரன்சி மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி? கிரிப்டோ கரன்சிகளை வாங்க வேண்டும், கிரிப்டோ கரன்சிகளின் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நல்ல எக்ஸ்சேஞ்கள் மூலமாக கிரிப்டோ கரன்சிகளை வாங்கிக் கொள்ளலாம். கிரிப்டோ கரன்சிகளை வாங்க விருப்பமுள்ளவர்கள் முதலில் சில விஷயங்களை செய்து கிரிப்டோ என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும்.
முதலில் கிரிப்டோ நாணயம் என்றால் என்ன? கிரிப்டோ வாலெட் என்றால் என்ன? கிரிப்டோ மார்க்கெட் என்றால் என்ன? கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் என்றால் என்ன? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். முதலில் நமது இணையதளத்தில் இருக்கும் கிரிப்டோ தொடர்புடைய அத்தனை கட்டுரைகளையும் வாசித்துவிடுங்கள்.
அடுத்தது கிரிப்டோ விவரங்களைத் தரும் இணையதளங்களைப் பார்வையிடுங்கள்.| | |
இவற்றுக்கு உதவக்கூடிய சில ஆப்களை உங்களின் தொலைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் | |
கீழே உள்ள கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்துகொள்ளுங்கள். மலேசியா (Luno), இந்தியா (WizarX), போது (Binance). அல்லது ஏதாவது ஒரு கிரிப்டோ வாலெட்டில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
சிறிய தொகையில் மலிவான கிரிப்டோ நாணயம் ஒன்றை வாங்கி ஒரு வாரத்துக்கு அதைக் கவனியுங்கள். உங்கள் கிரிப்டோ டிரேடிங் ஆப்பில் இருக்கும் மற்ற நாணயங்களின் ஏற்ற இறக்கங்களைக் கவனியுங்கள்.
பொருளாதார மாற்றங்களையும், கிரிப்டோ செய்திகளையும், கிரிப்டோ மார்க்கெட் நிலவரங்களையும், கிரிப்டோ நாணயங்களில் உண்டாகும் ஏற்ற இறக்கங்களையும் கவனித்து வாருங்கள். கிரிப்டோ டிரேடிங் மற்றும் கிராப் வாசிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
பின்பு நீங்கள் வாங்கிய நாணயத்தை மற்ற நாணயமாக மாற்றி பழகுங்கள். குறிப்பாக விலை இறங்கிய நாணயமாக மாற்றி அவற்றின் விலை அதிகரித்ததும் அடுத்த விலை குறைந்த நாணயமாக மாற்றுங்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்து வாருங்கள்.
சில நாட்களில் இவை அனைத்தும் உங்களுக்கு பரிச்சயமாகிவிடும். உண்மையில் கிரிப்டோ வாங்க விற்க நீங்கள் தயாரான பிறகு உங்களால் இயன்ற தொகையை முதலீடு செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்குங்கள். கிரிப்டோ பற்றிய புரிதலும், கிரிப்டோ வாங்கி விற்கக் கூடிய அளவுக்குப் புரிதலும் உண்டாகும் வரையில் பெரிய தொகையை முதலீடு செய்யாதீர்கள்.
Leave feedback about this