பொருளாதாரம்

கிரிப்டோ நாணயங்களினால் உண்டாகப் போகும் மாற்றங்கள்

black and blue computer keyboard

கிரிப்டோ நாணயங்களினால் (Cryptocurrency) உண்டாகப் போகும் மாற்றங்கள். Visa Card, Mastercard, American express, Dinners club, என்று பலவகையான பணப் பரிவர்த்தனை அட்டைகள் 1958ஆம் ஆண்டு முதலாக சந்தையில் உள்ளன. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே அவை சென்றடைந்துள்ளன. உலகம் முழுவதும் பெரும்பாலான நபர்கள் அவற்றைப் பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த வேண்டிய தேவைகள் அவர்களுக்கு உருவாகவில்லை.

ஆன்லைன் பெய்மெண்ட், கிரெடிட் கார்டு, சார்ஜ் கார்டு, டெபிட் கார்டு, செக், வாலெட், கியூஆர் பெய், மொபைல் பெய், என்று பல வகையான கட்டணம் செலுத்தும் முறைகள் நடைமுறையில் வந்துவிட்டன. இருந்தாலும் அன்றாட நடைமுறையில் மாதம் எத்தனை முறை நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம்?

நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு கட்டணங்கள் அரசாங்கம் வெளியிடும் பணம் மூலமாகவே செலுத்தப்படுகின்றன. மின்னியல் கட்டண முறைகள் மற்றும் வங்கி அட்டைகளின் மூலமாக கட்டணங்களைச் செலுத்தும் முறைகள் இப்போதுதான் வளரும் நாடுகளில் பிரபலமாகி வருகின்றன. அவை பெரும் வரவேற்பைப் பெறுவதற்கு இன்னும் இருபது ஆண்டுகள் ஆகலாம். அவ்வாறு இருக்கையில் நேற்று அறிமுகமான கிரிப்டோ நாணயங்கள் உலகத்தையே திருப்பிப் போட்டுவிடும். உலக மக்களின் கட்டண முறைகளை முழுமையாக மாற்றிவிடும் என்று கூறுவது வெறும் அனுமானங்கள் மட்டுமே.

வளர்ந்த நாடுகளில் கூட கிரிப்டோ நாணயங்கள் கட்டண முறையாக இன்னும் அமலுக்கு வரவில்லை. இணையதளங்களில் மட்டுமே பெரும்பான்மையாக கிரிப்டோ நாணயங்கள் கட்டண முறையாக அமலில் உள்ளன, அதுவும் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே. நிஜமான கடைகளில் கிரிப்டோ நாணயங்கள் கட்டண முறையாக அமலுக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அவற்றைக் கட்டணங்களாக ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் கூட Visa card, Mastercard, Debit Card, PayPal, QR payment, Wallet payment போன்று தற்போது பயன்பாட்டில் இருக்கும் கட்டண முறைகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன.

எதனால் கிரிப்டோ நாணயங்கள் அதிகமாகப் பேசப்படுகின்றன

கிரிப்டோ நாணயங்கள் பயன்பாட்டில் இருக்கும் வரையிலும், போது மக்களிடம் பிரபலமாக இருக்கும் வரையிலும் தான் கிரிப்டோ நாணயங்களை வெளியிடும் நிறுவனங்களும், அவற்றை வைத்தது தொழில் செய்பவர்களும், அவற்றை பெறுபான்மையாக வைத்திருப்பவர்களுக்கும் லாபம் ஈட்ட முடியும். இந்தக் காரணங்களால் தான் கிரிப்டோ நாணயங்களை பெருமைப்படுத்தி, அவற்றை உயர்வாகப் பேசி நிறைய செய்திகள் உலாவுகின்றன. அவற்றைக் கண்டு ஏமாந்து விடாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள்.

பெரும்பாலும் கிரிப்டோ நாணயங்களை வாங்குபவர்கள், அவற்றை முதலீட்டுக்காகவும், டிரேடிங் செய்யவும் தான் வாங்குகிறார்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் தேவை இருந்தால் மட்டுமே கிரிப்டோ நாணயங்களை வாங்குங்கள். கிரிப்டோ நாணயம் என்பவை பணத்தின் இன்னொரு உருவம் அவ்வளவுதான், ஆனால் எந்த வகையான உத்திரவாதமும் இல்லாத பணம். சிந்தித்து கவனமாக செயல்படுங்கள்.

இந்தியாவில் WazirX இணையதளம் மூலமாக கிரிப்டோ வாங்கலாம் விற்பனை செய்யலாம்.

எச்சரிக்கை
கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரிப்டோ நாணயங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும், லாபகரமாகவும் தெரியும், எச்சரிக்கையாக இருக்காவிட்டால் பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கி விடக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X