பொருளாதாரம்

கிரிப்டோ மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

Stock Market Graph on a Cellphone in Close-up Photography

கிரிப்டோ மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி? கிரிப்டோ கரன்சிகளின் மூலமாக பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் அனைவரும் எளிதாக பின்பற்றக்கூடிய ஒரு எளிய வழிமுறை நீண்ட கால முதலீடு. இந்த வழிமுறை எளிதானது மற்றும் பாதுகாப்பானது.

எனக்கு கிரிப்டோ பற்றிய அறிமுகம் இல்லை ஆனாலும் அதில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கூறுபவர்களுக்கும், டிரேடிங் செய்ய நேரம் இல்லாதவர்களுக்கும் இந்த வழிமுறை பொருத்தமானதாக இருக்கும். முதலீட்டுக்காக தங்கம் வாங்குவதைப் போன்று நல்ல தரமான கிரிப்டோ கரன்சி ஒன்றில் தன்னால் முடிந்த அளவு முதலீடு செய்வது தான் இந்த வழிமுறை.

ஒரு கிரிப்டோ நாணயத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி விட்டு அல்லது சந்தை மதிப்பில் வாங்கிவிட்டு அதன் விலை நன்றாக அதிகரிக்கும் வரையில் காத்திருந்து. விலை அதிகரித்த பின்பு லாபத்திற்கு விற்பனை செய்யலாம்.

நல்ல தரமான கிரிப்டோ நாணயங்கள் ஒரு வருடத்திற்குள் நல்ல விலை ஏற்றம் காண்கின்றன. நல்ல தரமான கிரிப்டோவில் முதலீடு செய்யும் போது, அதன் விலை ஒரு வருடத்திற்குள் 30% முதல் 500% வரையில் வளர்ச்சியடைகிறது. ஒரு வருடத்தில் 4000% வரையில் விலை அதிகரித்த நாணயங்களும் உள்ளன. அதே நேரத்தில் விலை அதிகரிக்காமல் தேங்கிய நாணயங்களும் உள்ளன.

நன்றாக ஆராய்ந்து பார்த்து தரமான எக்ஸ்சேஞ்களின் மூலமாக, நல்ல தரமான சந்தை மதிப்புடைய நாணயங்களை வாங்கும் போது நிச்சயமாக மூன்று மாதம் முதலாக நல்ல லாபம் காணலாம். ஒரு வருடத்தில் உங்களின் முதலீடு பலமடங்காக மாறக்கூடும்.

அதே நேரத்தில் நாணயங்களின் விலை குறையவும், தாமதமாக விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாணயத்தை விலை குறைந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. மீண்டும் விலை அதிகரிக்கும் வரையில் காத்திருந்து விற்பனை செய்யலாம்.

எச்சரிக்கை: கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரிப்டோ நாணயங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும், லாபகரமாகவும் தெரியும், எச்சரிக்கையாக இருக்காவிட்டால் பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கி விடக்கூடும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X