கிரிப்டோ மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி? கிரிப்டோ நாணயங்களின் மூலமாக பணம் சம்பாதிப்பதற்கு ஒரு எளிய வழிமுறை கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் செய்வது. கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் என்பது கிரிப்டோ எக்ஸ்சேஞ்களின் மூலமாக ஒரு நாணயத்தை இன்னொரு நாணயமாக மாற்றிக் கொள்வது.
கிரிப்டோ நாணயங்களின் விலைகள் தினமும் அதிகரிக்கவும் குறையவும் கூடிய தன்மையுடையவை. அனுதினமும் சில நாணயங்களின் விலை அதிகரிக்கும், சில நாணயங்களின் விலை குறையும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விலை குறைந்த மற்றும் விலை அதிகரிக்கக்கூடிய நாணயங்களை வாங்குவது; சில நாட்களில் அந்த நாணயங்களின் விலை அதிகரித்ததும் அவற்றை விற்று விட்டு, விலை குறைந்துள்ள நாணயங்களாக மாற்றிக் கொள்வது.
உதாரணத்துக்கு: 100 டாலருக்கு 1 டாலர் மதிப்புடைய நாணயத்தை வாங்கிவிட்டு, அதன் விலை அதிகரிக்க காத்திருக்க வேண்டும். அதன் விலை 10% அதிகரித்தவுடன் அதனை விற்று விட வேண்டும். இப்போது உங்களின் பணம் 110 டாலராகும்.
அந்த 110 டாலருக்கு மீண்டும் ஒரு விலை குறைந்துள்ள நாணயத்தை வாங்க வேண்டும், அதன் விலை 10% அதிகரித்தவுடன் அதனை விற்று விட வேண்டும். இப்போது உங்களிடம் 121 டாலர் இருக்கும். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்து வரும்போது உங்களின் முதலீடு பல மடங்காக மாறிவிடும். ஆனால் நாணயங்களின் விலை குறையவும், தாமதமாக விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பரிமாற்றம் செய்யும் போதும், சந்தை சமநிலையை இழக்கும் போதும், நீங்கள் வாங்கிய நாணயத்தை USDC, USDT, BUSD, DAI, போன்று அமெரிக்கா நாணயத்தின் மதிப்பில் நிலைத்திருக்கும் ஸ்டேபிள் கோயின்சாக stable coins மாற்றிக்கொள்ள வேண்டும்.