கோவிட்-19

கோவிட்டின் பெயரால் உண்டான மரணம் – 2

கோவிட்டின் பெயரால் உண்டான மரணம் – 2

என் உறவினர்களுக்கு கோவிட்-19 ன் பெயரால் உண்டான மரணங்களில் நான் கேள்விப்பட்ட இரண்டாவது மரணம் எனது பெரிய மாமியார்.

அன்றைய கால கட்டத்தில் அவர் குடும்பத்தில் ஒரு சிலருக்கு கோவிட்-19 அறிகுறிகள் உருவாகியுள்ளன அவர்கள் அனைவரும் வீட்டிலேயே சில கசாயம் தயாரித்து உட்கொண்டு தனது தொந்தரவைப் போக்கிக் கொண்டார்கள்.

சில வாரங்களுக்குப் பின்னர் எனது பெரிய மாமியாருக்கு கோவிட்-19 அறிகுறிகள் உருவாகியுள்ளன. அவர் அதைக் கண்டு அஞ்சாமல் மற்ற குடும்ப உறுப்பினர்களைப் போன்று வீட்டு மருத்துவங்கள் மூலமாகவே சரி செய்து கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார், ஆனால் அவரின் பிள்ளைகள் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் இளமையாக இருக்கிறோம் அதனால் எங்களுக்கு எளிதாகக் குணமாகிவிட்டது நீங்கள் முதியவர் உங்களுக்கு ஆங்கில மருத்துவம் செய்தால் தான் குணமாகும் என்று வற்புறுத்தி உள்ளார்கள்.

என் மாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, நம்மூரில் தனியார் ஆங்கில மருத்துவமனைகளுக்கு கோவிட்-19 மருத்துவம் செய்வதற்காக சென்ற பெரும்பாலோனோர் பிணமாகத் தான் திரும்பி வந்தார்கள், வீட்டிலேயே மருத்துவம் செய்தவர்கள் மட்டும் தான் பிழைத்துக்கொண்டார்கள் அதனால் நான் ஆங்கில மருத்துவத்துக்குச் செல்லமாட்டேன் என்று மறுத்திருக்கிறார்.

ஆனாலும் அவரின் பிள்ளைகள் விடவில்லை, அவரை வற்புறுத்தி காரைக்குடியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒரு சில நாட்கள் சிகிச்சை வழங்கியுள்ளார்கள், நன்றாக இருந்திருக்கிறார். திடீரென ஒரு நாள் அவருக்குத் துணையாக இருந்த அவரின் மகள் உணவு வாங்குவதற்காக வெளியில் சென்று திரும்பும் போது உயிரற்ற உடலாக இருந்திருக்கிறார். என்ன நடந்தது எதனால் இறந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இவரை போன்று பலருக்கும் கோவிட் 19 தொற்று உண்டானதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் வீட்டிலேயே மருத்துவம் செய்து கொண்டவர்கள் மட்டும் தான் பெரும்பாலும் முழுமையாகக் குணமாகி இருக்கிறார்கள். நான் கேள்விப்பட்டவரையில் கோவிட்-19 னால் இறந்தவர்கள் பெரும்பாலும் ஆங்கில மருத்துவமனைக்குச் சென்றவர்கள் மட்டுமே. வீட்டிலேயே மருத்துவம் பார்த்து இறந்ததாக ஒருவரை கூட நான் இதுவரை கேள்விப்படவில்லை.

கோவிட்-19 என்று பெயர் சூட்ட வில்லை என்றால் அது வெறும் காய்ச்சல், உடல் வலி, மூச்சுத் திணறல் தானே. அதனால் ஒரு மனிதர் இறந்து போவதற்கு வாய்ப்பில்லை, ஆங்கில மருந்துகளின் ரசாயன கலவைகள் ஒத்துக் கொள்ளாமல் பக்க விளைவுகளால் தான் பெரும்பாலான கோவிட்-19 நோயாளிகள் இறந்திருப்பார்கள் என்பது எனது கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X