கோவிட்டின் பெயரால் உண்டான மரணம். கோவிட் என்று ஒரு நோய் இருப்பதாகவும், அந்த நோய் கொரோனா என்ற கிருமியால் உருவாகுவதாகவும் ஒரு வருடத்துக்கும் மேலாக தொலைக்காட்சி, நாளிதழ்கள், யூடுப் மற்றும் இணையதளங்களின் மூலமாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
என்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களில், என் உறவுகளில் கோவிட்டுக்கு பலியானார் என்று நான் முதன் முதலில் கேள்விப்பட்டது எனது மாமனாரின் அண்ணன்.
தொடக்கத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவமனை பணியாளர்கள் அவருக்கு கோவிட் அறிகுறிகள் உள்ளன என்று கூறி அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.
ஏழு நாட்கள் அந்த தனியார் மருத்துவமனையில் கோவிட்-19 க்காக மருத்துவம் பார்த்திருக்கிறார். பின் குணமாகி வீடு திரும்பிவிட்டார். மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போகவே, மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு சில நாட்களில் நான் நன்றாக இருக்கிறேன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள் என்று தனது உறவுகளிடம் கூறியிருக்கிறார் ஆனால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பச் சம்மதிக்கவில்லை. சில நாட்களில் அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள், மருத்துவமனையில் இருந்தால் நான் இறந்துவிடுவேன் என்று புலம்ப தொடங்கியுள்ளார்.
ஆனாலும் பயத்தினாலோ, அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டோ அவரின் குடும்பத்தினர், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. மருத்துவர்களும் அவரை வீட்டுக்கு அனுப்பச் சம்மதிக்கவில்லை. ஏழு நாட்கள் கழித்து மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
அந்த தனியார் மருத்துவமனை, இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய் என்று உலக சுகாதார அமைச்சகமே கூறும் கோவிட்-19 க்கு மருத்துவம் பார்த்த செலவாக அவரின் குடும்பத்தாரிடம் இருந்து 8 லட்சத்துக்கு மேல் வசூல் செய்துள்ளார்கள்.