கோவிட்-19

கோவிட்-19 னும் இயற்கை மருத்துவமும்

Visualization of the Coronavirus

கோவிட்-19 னும் இயற்கை மருத்துவமும். நாளிதழ்களில் வெளிவந்த செய்தி:
அண்மையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, லேசான பாதிப்பு இருக்கும் நோயாளிக்கு 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொந்தரவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைச்சும், உலக நாடுகளும் அறிவித்த பின்னும், ஆங்கில மருத்துவர்கள் 2-3 லட்சங்களுக்கு என்ன மருத்துவம் செய்வார்கள்? இருக்கின்ற மருந்திலேயே குணமாகும் என்றால் கோவிட்-19 என்பது முன்பு இருந்து வந்த சாதாரணத் தொந்தரவுகள்தான், பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்று நான் சொல்வது சரிதானே?

சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்களுக்குக்கூட வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் கேடுகெட்ட, மனசாட்சி இல்லாத சில மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருக்கும் இந்த நாட்டில், காய்ச்சலுக்கு 2 லட்சம் வாங்கலாம் என்றால் விடுவார்களா?

சாதாரணமாக கோவிட்-19 நோய் அறிகுறிகளைப் பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரிலேயே பல லட்சங்களை சம்பாதிக்கக்கூடிய சந்தர்ப்பம், இதை 50 ரூபாய் மருந்தில் குணமாகிவிட விடுவார்களா? அதனால்தான் கோவிட்-19 நோய்க்கு மருந்து என்று யார் பேசினாலும் ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

கோவிட்-19 னால் பாதிக்கப்பட்ட முதல் நாடு சீனா, அது முழுமையாக அந்தத் தொற்றிலிருந்து விடுபட்டு விட்டது. அந்த நாட்டு அரசாங்கம் நாங்கள் பாரம்பரிய இயற்கை மூலிகை மருந்துகளைக் கொண்டுதான் பெரும்பாலான நோயாளிகளைக் குணப்படுத்தினோம் என்று கூறும் போது இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் இயற்கை பாரம்பரிய மருத்துவங்களை ஒதுக்குவது ஏன்? சோதனை முறையில் கூட இயற்கை மருத்துவங்களைப் பரிசோதித்துப் பார்க்க முன்வராதது ஏன்?

காரணம் மருத்துவ வியாபாரம் மற்றும் பணம். மனித உயிர்களைவிடவும் பணம் சம்பாதிப்பது அவ்வளவு முக்கியமா? இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், நீங்கள் செய்யும் அத்தனை விசயங்களும் உங்களுக்கும் உங்களின் தலைமுறைக்கும் திரும்பிவரும், என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X