கோவிட்-19 மூன்றாவது உலகப்போர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதியை உருவாக்கி, உலகத்தையே ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றிவிட்டார்கள். வாகன விபத்தில் மரணித்தவர் முதல், வலிப்பு வந்து மரணித்தவர் வரையில் அனைவரையும், கொரோனா வைரஸ் பாதிப்பினால் தான் மரணித்தார்கள் என்று மக்களை நம்பவைத்துள்ளார்கள்.
பொது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாக சில முதலாளிகளும் பல முட்டாள்களும் இணைத்து மரணபயத்தை மக்களிடையே பரப்பிவிட்டார்கள். பெரும் தொழிலதிபர்கள் வியாபார நோக்கத்துக்காக ஒரு பக்கம் பயத்தைத் தூண்டினால், சில முட்டாள்கள் லைக்ஸ் கிடைக்கும், புதிய சப்ஸ்க்ரைபர்கள் கிடைப்பார்கள் என்ற ஆசையில் மக்களிடையே தவறான வதந்திகளைப் பரப்பிவிட்டார்கள். இது அந்த வியாபாரக் கூட்டத்துக்கு பொன்னான வாய்ப்பாக அமைந்து விட்டது.
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சில காணொளிகளும், விளையாட்டாக உருவாக்கப்பட்ட சில காணொளிகளும், மக்களை முட்டாளாக்க உருவாக்கப்பட்ட சில காணொளிகளும் மக்களின் அறிவை மழுங்கச் செய்தன. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை கட்டுதல், சோர்வு, வலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல், இவை அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்கு வந்து போகும் சாதாரண உடல் உபாதைகள் தான். பல்லாயிரம் ஆண்டுகளாக வந்துபோகும் இந்த தொந்தரவுகளுக்கு கோவிட்-19 என்று பெயர் சூட்டியவுடன் மக்களிடையே உருவான பயத்தையும் பீதியையும் கவனித்தீர்களா?
ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்நாளில் பலமுறை சந்தித்த தொந்தரவுகள், ஒரு புதிய பெயருடன் அறிமுகப் படுத்தப்பட்டதும் அப்படியே மூளையைக் கழட்டி மூலையில் வைத்துவிட்டு தொலைக்காட்சி, வானொலி, whatsapp, facebook, என எதில் என்ன வந்தாலும் நம்பக்கூடிய கூட்டமாக மாறிவிட்டார்கள். உயிர் போய்விடும், மரணம் நெருங்கிவிடும் என்று பயத்தைக் காட்டியதும் எதையும் செய்யக்கூடிய அடிமைகளாக மாறிப்போனார்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் சராசரியாக 2.5% முதல் 7% வரையில் மரணிக்கிறார்கள் என்று உலக நாடுகள் அறிக்கை வெளியிடுகின்றன. இது மற்ற பெரிய நோய்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறிய எண்ணிக்கை தான். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள், அவர்களில் பெரும்பாலானோருக்கு வேறு வகையான நோய்களும் இருந்தன.
கொரோனா வைரஸ் தாக்கித்தான் மக்கள் மரணமடைகிறார்கள் என்றால் அனைவரும், அல்லது அனைத்து வயதினரும் மரணமடைய வேண்டும் அல்லவா? 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாள்பட்ட நோய்களுக்காக ஆங்கில மருத்துவம் செய்பவர்களும் மட்டுமே மரணிக்கிறார்கள் என்றால் அவர்களை எப்படி கொரோனா கிருமியால் மரணித்தார்கள் என்று கூற முடியும்?
முடியும்… அரசாங்கங்களும், செய்தி – தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். அதுவும் மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு உண்மையைப் போன்றே சொல்வார்கள். எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுவதற்காக நலமாக உள்ள மக்களையும் நோயாளிகள் என்பார்கள். மருத்துவமனைகளில் மரணிக்கும் அனைவரையும் கிருமிகளினால் இறந்தார்கள் என்று கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள்.
மக்களைப் பயமுறுத்தவும், அடிமைப்படுத்தவும், தன் கட்டுக்குள் வைத்திருக்கவும் நடக்கும் நாடகம் இது. கோவிட்-19 எனும் இந்த கேலிக்கூத்தை நினைத்து அச்சம் கொள்ளாதீர்கள். இது வெறும் வியாபாரம், சில அமைப்புகளும், சில அரசாங்கங்களும், சில பெரும் நிறுவனங்களும், சில கோடீஸ்வரர்களும், இணைந்து போது மக்களை அடிமைப்படுத்தும் ஒரு யுக்தி. ஆயுதமின்றி, ரத்தமின்றி, நடக்கும் மூன்றாவது உலகப்போர்.
Leave feedback about this