கோவிட்-19 குணமான அனுபவம். ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், மலேசியாவில் என் உறவினர் ஒருவர் என்னைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்று கூறப்படும் அத்தனையும் ஒரு வாரமாக என்னிடம் இருக்கின்றன. வீட்டில் பிள்ளைகளும் பெரியவர்களும் இருப்பதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் வெளியில் தங்கியிருக்கிறேன். கொரோனா தொற்றாக இருக்குமோ என்று அச்சமாக இருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்லலாமா வேண்டாமா? என்ற குழப்பத்துடன் இருக்கிறேன். இந்த உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருந்து ஏதாவது உள்ளதா? என்று கேட்டார்.
கிருமிகள் மற்றும் உடலைப் பற்றிய சில விளக்கங்களைக் கூறிவிட்டு, திரிகடுகு சூரணத்தை மருந்தாக, தினம் மூன்று வேலைகள் சாப்பிடுங்கள் என்றேன். காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலையும், மதியம் சாப்பாட்டுக்கு முன்பாக ஒரு வேலையும், இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு வேளையும் வெந்நீரில் ஒரு டீ கரண்டி திரிகடுகு சூரணம் உட்கொள்ள அறிவுறுத்தினேன்.
சில நாட்கள் கழித்து தொலைபேசியில் கேட்ட போது, முதல் நாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலை திரிகடுகு சூரணம் உட்கொண்டதும், மதியம் தொண்டைக்கட்டுக் குணமானது, அன்று மாலையே முழுமையாக அத்தனை தொந்தரவுகளும் மறைந்துவிட்டன என்றார். சாதாரணமாக நாம் சளிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் இயற்கை மற்றும் சித்த மருந்துகள் மூலமாக குணமாகக் கூடிய சாதாரணத் தொந்தரவுதான் கோவிட்-19 தொற்று என்பது. அதில் அச்சப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை.