கோவிட்-19

கொரோனா வைரஸ் Vs சார்ஸ் வைரஸ்

Coronavirus

கொரோனா வைரஸ் Vs சார்ஸ் வைரஸ். 2003ஆம் ஆண்டு சார்ஸ் (SARS) என்ற ஒரு கிருமி அல்காயிதா அமைப்பினரால் பரப்பப்படுகிறது என்றும், அது சீனாவிலிருந்து பரவுகிறது என்றும்; அந்தக் கிருமி மிகவும் ஆபத்தானது, அது உடலின்மீது பட்டால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் ஒரு செய்தி உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

கிருமி பயத்தால் பல நாடுகளில் தூதரகங்களுக்கும் முக்கியமான அரசாங்க அலுவலகங்களுக்கும் தீவிரப் பாதுகாப்பு அளிக்கப்பட்டன, சில மூடப்பட்டன. அந்தச் சூழ்நிலையில் மலேசியாவில் ஒரு வல்லரசு நாட்டின் தூதரகத்துக்கு சார்ஸ் (SARS) கிருமி தபால் மூலமாக அனுப்பப்பட்டதாக செய்தி வந்தது. அந்தக் கிருமிகளை எவ்வாறு அழித்தார்கள் தெரியுமா?

தீயணைப்பு வண்டியில் தண்ணீரைக் கொண்டுவந்து; அந்தத் தபாலை கட்டிடத்தின் வெளியே தரையில் போட்டு, அந்தக் கிருமி அடங்கிய தபாலின் மீது தண்ணீரைப் பீச்சி அடித்தார்கள். அவ்வளவுதான் ஒரு தபால் நிறைய கிருமிகளை அழிக்க அவர்கள் பயன்படுத்திய வழிமுறை. இந்தச் செய்தி மலேசிய நாளிதழ்களில் புகைப்படங்களுடன் வெளிவந்தன. ஒரு தபாலில் எத்தனை கிருமிகள் இருந்திருக்கலாம் என்று கணக்கிட்டால், பல லட்சம் கோடி கிருமிகள் அந்தப் பொட்டலத்தில் இருந்திருக்கலாம்.

மனித உடலில் தொற்றும் கிருமிகளை இந்த வழிமுறையின் மூலமாக அழிக்க முடியுமா- முடியாதா?.. முடியும். பல லட்சம் கோடி கிருமிகளை அழிப்பதற்கு தண்ணீர் போதுமென்றால் மனித உடலில் ஒட்டும் சில கிருமிகளை அழிப்பதற்கு தண்ணீர் போதாதா?

கிருமிகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்கள். கிருமிகள் பெரும்பாலும் காற்றுப் பட்டாலோ, தண்ணீர் பட்டாலோ அழிந்துப் போகக் கூடியவை. நாம் தினசரி குளிக்கும்போதே, சோப்பு, சாம்பு, லோஷன், எதுவும் பயன்படுத்தாவிட்டாலும் கூட தண்ணீர் பட்டதும் அத்தனை கிருமிகளும் செத்துவிடும்.

கிருமிகள் மனிதர்களைக் கொல்லும் என்றால் இந்த உலகில் ஒரு மனிதன் கூட உயிரோடு இருக்க மாட்டான். கிருமிகள் இல்லாத இடமுமில்லை, பொருளுமில்லை, விலங்குமில்லை, மனிதனுமில்லை. காற்று இருக்கும் இடங்களிலெல்லாம் கிருமிகள் நிறைந்திருக்கின்றன.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field