கோவிட்-19

கொரோனா வைரஸ் தடுப்பூசி

கொரோனா வைரஸ் தடுப்பூசி. பத்து – பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பன் பூச்சிக்கு மருந்து (ஸ்பிரே) அடித்தால் உடனே அந்தக் கருப்பன் பூச்சி செத்துவிடும். அதன் தற்போதைய நிலை என்ன? எந்த மருந்தை அடித்தாலும் கருப்பன் பூச்சிகள் தப்பி ஓடுகின்றன. கருப்பன் பூச்சி மருந்தில் (விசத்தில்) பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்ட பிறகும் அந்தப் பூச்சியால் அந்த மருந்தை (விசத்தை) எதிர்க்க முடிகிறது, இதற்குக் காரணம் கருப்பன் பூச்சிகள் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்கின்றன, அவற்றின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரித்துவிட்டன, இதே நிலைதான் மனிதர்களுக்கும்.

ஒரு காலத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டாள் காய்ச்சல் உண்டாகும், வயிற்றுப் போக்கு உண்டாகும். சிலருக்கு தடுப்பூசியின் பக்கவிளைவுகளினால் சில நோய்களும் உபாதைகளும் கூட உண்டாகும். ஆனால் தற்போது பெரும்பாலும் யாருக்கும் எந்த மாறுதலும் உண்டாவதில்லை. இதற்குக் காரணம் மனிதர்களின் உடல் தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடிய (resistance) தன்மைக்கு வந்துவிட்டது.

தடுப்பூசி விற்பனை மற்றும் அவற்றின் பக்கவிளைவு சிகிச்சை வியாபாரத்தின் மூலமாக செல்வம் ஈட்டும் மருத்துவ வியாபாரிகள் சில புதிய தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய திட்டமிடுகின்றனர். தற்போது நோய்களின் பெயரால் பல புதிய தடுப்பூசிகள் அறிமுகமாகிவிட்டன, அடுத்ததாக அவர்கள் அறிமுகப்படுத்தி அனைவருக்கும் செலுத்தத் திட்டமிடுவது Covid-19 தடுப்பூசி. ஜனவரி 2021 கால கட்டத்தில் இந்தத் தடுப்பூசி அறிமுகப் படுத்தப்பட்டு அனைவருக்கும் வற்புறுத்திச் செலுத்தப்படும்.

இந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாதவர்கள் விமானங்களில் பயணிக்க முடியாது, ரயிலில் பயணிக்க முடியாது, போது போக்குவரத்துகளைப் பயன்படுத்த முடியாது, பல்கலைக்கழகம், கல்லூரி, மற்றும் பள்ளிகளில் கல்வி கற்க முடியாது, அரசாங்க சேவைகளைப் பெற முடியாது, போன்ற பல சட்டங்கள் கொண்டுவரப்படும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field