நோய்கள்

கொரோனா கிருமி இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை

கொரோனா கிருமி இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. இன்றைய நாள் வரையில் கொரோனா என்று ஒரு கிருமி இருப்பதாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் சொல்கிறார்களே ஒழிய, இதுதான் அந்தக் கிருமி, அந்தக் கிருமி இப்படித்தான் இருக்கும், இதுதான் அதன் குணாதிசயம், என்று யாரும் நிரூபிக்கவில்லை. மனிதர்களுக்கிடையே அந்தக் கிருமி இருப்பதற்கான எந்தச் சான்றும் பொது மக்களின் முன்வைக்கப் படவில்லை.

கொரோனா கிருமி இப்படித்தான் உருவாகிறது, இப்படித்தான் அந்தக் கிருமி பரவுகிறது, இவ்வாறுதான் அந்தக் கிருமித் தொற்று இருப்பதை உறுதி செய்கிறோம், இவ்வாறுதான் அந்த கிருமித் தொற்றுக்கு மருத்துவம் செய்கிறோம் என்று, எந்த அரசாங்கமும், உலக சுகாதார அமைச்சும், மருத்துவ நிறுவனங்களும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும், பொதுமக்களுக்கு விளக்கவில்லை.

இருப்பதாக நிரூபிக்கப்படாத, யார் கண்ணுக்கும் காட்டப்படாத, கொரோனா என்று ஒரு கிருமியின் பெயரை மட்டும் சொல்லி இந்நாள் வரையில் பயத்தை விதைத்து, மருத்துவம் என்ற பெயரில் இல்லாத நோய்க்கு வைத்தியம் செய்கிறோம் என்று மக்களைச் சுரண்டுகிறார்கள், கொலை செய்கிறார்கள்.

இல்லாத கிருமியிடம் இருந்து பொதுமக்களை காப்பதாகக் கூறிக்கொண்டு திடீர் மரணம் உட்பட பல பக்கவிளைவுகளை உருவாக்கக் கூடிய தடுப்பூசிகளை அறிமுகம் செய்கிறார்கள். அவற்றைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்.

உலகம் முழுமைக்கும் சர்க்கரை நோய் முதலாக புற்றுநோய் வரையில், பல நோய்களால் ஆண்டுக்கு பல கோடி மக்கள் மரணமடைகிறார்கள். அந்த நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் இல்லை, அந்தக் கொடிய நோய்களுக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் மரணம் வரையில் குணமாவதில்லை. ஆனால் அந்த கொடிய நோய்களைப் பற்றி உலக சுகாதார அமைச்சோ, நம்முடைய அரசாங்கங்களோ அக்கறை கொள்வதில்லை, அவற்றுக்கான விழிப்புணர்வையும் உண்டாக்குவதில்லை.

கோவிட் -19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மக்களில் 95% க்கும் மேல் உலகம் முழுமைக்கும் குணமாகியுள்ளனர். குணமாக வாய்ப்பே இல்லாத நோய்களைப் பற்றி பேசாமல் 95% குணமாக வாய்ப்புடைய நோயைப்பற்றி எதற்காக மக்களிடையில் அச்சத்தை உண்டாக்குகிறார்கள் என்பது சிந்திப்பவர்களுக்குப் புரியும்.

இந்த கோவிட்-19 நாடகம் மற்றும் மிரட்டலுக்கு உள்நோக்கம், புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்வது. தற்போது நடைமுறையில் இருக்கும் 16 கட்டாயத் தடுப்பூசிகளுடன் புதிதாக ஒரு தடுப்பூசியைக் கட்டாயமாக்க வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு புதிய தடுப்பூசிகளை அறிமுகம் செய்தார்கள் என்பது, தற்போதைய உலக நிலவரத்தைப் பார்த்தாலே நமக்குத் தெளிவாகப் புரியும்.

அதிகமான மரணங்களை உண்டாக்கும் நோய்களின் விவரங்கள்

https://ourworldindata.org/causes-of-death
https://www.weforum.org/agenda/2021/02/top-10-global-causes-death/
https://www.who.int/news-room/fact-sheets/detail/the-top-10-causes-of-death
https://en.wikipedia.org/wiki/List_of_causes_of_death_by_rate
https://www.cdc.gov/nchs/fastats/leading-causes-of-death.htm

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X