ரெய்கி

மனிதனின் சக்ராக்களும் அவற்றின் தன்மைகளும்

மூலாதாரம் – Mooladhara – Root / Base chakra

மனித உடலின் அடிப்படை அல்லது ஆதாரச் சக்கரம் மூலாதாரம். இது முதுகெலும்பு முடியும் இடத்தில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வண்ணம் சிகப்பு, பஞ்சபூதம் நிலம்.

இதன் இயல்பு, மனிதனின் அடிப்படைத் தேவைகளையும் உணர்வுகளையும் உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

சுவாதிஸ்தானம் – Svadhisthana – Sacral chakra

மனிதனின் இரண்டாவது சக்கரம் சுவாதிஸ்தானம். இது தொப்புளிலிருந்து இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது. இதன் வண்ணம் ஆரஞ்சு, பஞ்சபூதம் நீர்.

இதன் இயல்பு, மனிதர்களின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

மணிபூரகம் – Manipura – Solar Plexus chakra

மனிதர்களின் மூன்றாவது சக்கரம் மணிபூரகம். இது தொப்புளுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இதன் வண்ணம் மஞ்சள், பஞ்சபூதம் நெருப்பு.

இதன் இயல்பு, தன்மானம், தன்னம்பிக்கை, மற்றும் தன்மதிப்பை உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

அனாகதம் – Anahatha – Heart chakra

மனிதர்களின் நான்காவது சக்கரம் அனாகதம். இது நெஞ்சுப் பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதன் வண்ணம் பச்சை, பஞ்சபூதம் காற்று.

இதன் இயல்பு, அன்பு, பாசம், கருணை, அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

விசுத்தி – Vishuddha –Throat chakra

மனிதர்களின் ஐந்தாவது சக்கரம் விசுத்தி. இது கழுத்தில் தொண்டைக் குழியின் பின் அமைந்துள்ளது. இதன் வண்ணம் நீலம், பஞ்சபூதம் மரம்.

இதன் இயல்பு, பேச்சுத்திறன், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றை உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

ஆக்கினை – Ajna – Brow / Third Eye chakra

மனிதர்களின் ஆறாவது சக்கரம் ஆக்கினை. இது இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. இதன் வண்ணம் கருநீலம், பஞ்சபூதம் புத்தி.

இதன் இயல்பு, புத்திக் கூர்மையையும், பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

சஹஸ்ராரம் Sahasrara – Crown chakra

மனிதர்களின் ஏழாவது சக்கரம் சஹஸ்ராரம். இது தலையில் ஒட்டாமல், உச்சந்தலையின் மேற்புறமாக, தலையிலிருந்து ஒரு அங்குலம் மேலே அமைந்துள்ளது. இதன் வண்ணம் கத்தரிப்பூ, பஞ்சபூதம் பிரபஞ்சம்.

இதன் இயல்பு, இந்தப் பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிவிப்பது. ஞானத்தை விளங்க வைப்பது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field