பொது

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி பற்றிய முக்கிய தகவல்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எவ்வாறு தயாராவது?

நீதிபதி ஜி.எம் அக்பர் அலி, CAA, NPR மற்றும் NRC ஆகியவற்றை மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். இந்த விளக்கத்தை கவனமாக படித்து புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் பகிரவும்.

குடியுரிமைச் சட்டம் 1955-ன் கீழ் ஒருவர் இந்தியர் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிக்க பின்வரும் ஒவ்வொன்றையும் செய்யுங்கள்:

1. வீட்டில் உள்ள அனைவரின் பிறந்த தேதியையும் எழுதிக் கொள்ளவும்.

2. அந்த தேதிகளை மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளவும்.

  • ஜூலை 1, 1987 க்கு முன் பிறந்தவர்கள்
  • 1 ஜூலை 1987 மற்றும் 31 டிசம்பர் 2004 க்கும் இடையில் பிறந்தவர்கள்.
  • 31 டிசம்பர் 2004 க்குப் பிறகு பிறந்தவர்கள்.

3. இப்போது, ஜூலை 1, 1987 க்கு முன் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவும். இதன்மூலம் அவர்கள் பிறப்பால் நேரடியாக இந்தியர்கள் என்பது உறுதியாகும்.

4. ஜூலை 1, 1987 க்குப் பிறகு பிறந்த அனைவரும் பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும்…

  • ஜூலை 1987 மற்றும் டிசம்பர் 2004 க்கு இடையில் பிறந்தவர்களின் பெற்றோரில் ஒருவர் இந்தியர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பாஸ்போர்ட்டில் உள்ள பெற்றோரின் விவரங்களில் குறைந்தது ஒருவரின், பெயர், பிறப்பு, மற்றும் பிற விவரங்கள் பிறப்புச் சான்றிதழுடன் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்துகொள்ளவும். அவ்வாறு இருந்தால் அவர்கள் இந்தியர்கள் என்பது உறுதியாகும்.

5. டிசம்பர் 2004 க்குப் பிறகு பிறந்த நபர்களின் பெற்றோர் இருவரும் இந்தியராக இருக்க வேண்டும் மேலும் அவர்களின் சான்றிதழ்களில் அவர்களின் பெயர்கள் சரியாகப் பொருந்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் இந்தியர்கள் என்பது உறுதியாகும்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில், வீட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் விவரங்களையும் சரிபார்த்து, பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களின் பட்டியலை எடுக்க வேண்டும்.

பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது ரேஷன் கார்டை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். இது எளிமையானது.

பிறப்புச் சான்றிதழ் பெற:

1. அந்த நபர் மருத்துவமனையில் பிறந்திருந்தால், மருத்துவமனை அமைந்துள்ள பகுதி கிராமம் / தாலுகா / மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று விவரங்களுடன் விண்ணப்பிக்கவும். செலவு ரூ.200 மட்டுமே. இது எளிதில் கிடைக்கிறது.

2. அந்த நபர் வீட்டில் பிறந்திருந்தால், பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று அறிவிக்கப்பட்ட சான்றொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரத்தைத் தயாரித்து உங்கள் கிராமம் / தாலுகா / மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பதற்கான ஆதாரத்தை வழங்குவார்கள். அதை மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும். ஆண்டுக்கு ரூ.200 என்ற அபராதத்துடன் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால், குறைந்தபட்சம் ஒரு குடும்பத்துக்காவது உதவ முயற்சி செய்யுங்கள். மற்றவர்களையும் அவ்வாறே செய்யச் சொல்லுங்கள்.

இன்ஷா அல்லாஹ், சமூகத்தில் அனைவரும் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க தேவையான சட்ட ஆவணங்களை உருவாக்கலாம்.

P. சையத் இப்ராஹிம் Adv
சென்னை உயர்நீதிமன்றம்.

(தயவுசெய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X