ஆன்மீகம்

ஆவுடையார் கோவிலில் காண வேண்டிய சிறப்புகள்

ஆவுடையார் கோவிலில் காண வேண்டிய சிறப்புகள்

1. கோயிலின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் குரங்கு மற்றும் உடும்பின் சிற்பங்கள். இவை பக்தி மார்க்கத்தின் இரண்டு வழிபாட்டு முறைகளைக் குறிக்கின்றன.

2. கொடுங்கை ஆறு வகையான கம்பிகளின் உருவில் செதுக்கப்பட்ட தாழ்வாரம். இன்று புழக்கத்தில் இருக்கும் கம்பிகளின் வடிவில் அன்றே கற்களைக் கொண்டு செதுக்கியிருக்கிறார்கள்.

3. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள். நரம்பு எலும்பு ரேகைகள் நகங்கள் காலணிகள் நகைகள் என அனைத்தும் மிகத் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

4. மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இருந்து மூன்று வகையான உபதேசங்களைப் பெற்ற சிற்பங்கள் உள்ளன. நயனம், ஸ்பரிசம் மற்றும் திருவடி தீட்சை.

5. பல ஜீவராசிகள் இறைவனை வழிபடுவதைப் போன்ற சிற்பங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. வண்டு, மாடு, ஆடு, குரங்கு, மற்றும் யானை.

6. சிவன் பார்வதியுடன் தம்பதியாக காட்சிதரும் 1008 சிவாலயங்களின் கல் ஓவியங்கள் அங்கு உள்ளன. அவற்றை பக்தியுடன் தரிசனம் செய்தாலே 1008 சிவ தலங்கள் தரிசனம் செய்ததாக ஐதீகம்.

7. மராட்டியம் கிரேக்கம் எகிப்து கேரளா என பல நாட்டுக் குதிரைகளின் சிற்பங்கள் உள்ளன.

8. ஆயிரம் கால்களைக் கொண்ட இரண்டு தூண்கள்.

9. ஆறு யானைகளை ஒரே நேரத்தில் தூக்கிச் செல்லும் பறவைகளின் ஓவியம்.

10. 27 நட்சத்திரங்கள் உருவங்களாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.

11. இலை தழைகளைக் கொண்டு வரையப்பட்ட பச்சிலை ஓவியங்கள்.

12. ஆங்கிலேயர்களால் சோதித்துப் பார்ப்பதற்காகச் சுடப்பட்ட கொடுங்கை.

13. சேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜரிகை வேலைப்பாடுகள்.

14. பிடிப்பில்லாமல் நிற்கும் கற்பாறைகள்.

15. சப்த சுரங்கள் எழுப்பக் கூடிய தூண்கள்.

16. ராசிகளுடன் கற்சங்கிலிகள்.

17. நடன முத்திரைகள்.

18. கல்வெட்டுக்கள்.

19. கல் தீபத் தூண்கள்.

20. நவக்கிரக தூண்கள்.

21. வில்லுடன் முருகன்.

22. அண்டில் பறவை.

இன்னும் காண வேண்டிய எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன.

தொகுத்தவர் எஸ். ஜானகிராமன் கோயில் வழிகாட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *