எந்த சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முன்முடிவுகளை உருவாக்காதீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த விசயம் இப்படித்தான் நடக்கும், இந்த நோய் இப்படித்தான் குணமாகும், இந்தப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு, இதுதான் உண்மை, இதுதான் பொய், என்று எந்த ஒரு முன்முடிவுக்கும் வந்து விடாதீர்கள்.
இந்த உலக வாழ்க்கை விசித்திரமானது, எது உண்மை? எது பொய்? எது எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்? எப்போது தீர்வு கிடைக்கும்? என்பனப் பற்றி எதுவும் யாருக்கும் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட காலகட்டம் வரும்போது எல்லாம் சாதகமாக நடக்கும் என்பது மட்டும் உறுதி. ஒவ்வொரு விதைக்கும் அது முளைத்துத் துளிர்விடும் கால அளவு உள்ளது. அதைப்போன்றே ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு கால அளவு இருக்கும். அந்த காலகட்டம் வரும்போது அது மாறும், அதற்கான தீர்வும் கிடைக்கும்.
நம் மனதில் ஏற்கனவே முன்முடிவு இருந்தால், நம் வாழ்க்கையில் நடப்பவை மனதின் பதிவுகளுக்கு ஏற்பவே நடக்கும். சரியாக, எளிதாக, நடக்க வேண்டிய விசயங்கள் கூட நம் மனப் பதிவுகளால் தவறாக, தாமதமாக, குழப்பத்துடன், நடைபெறலாம்.
உதாரணத்துக்கு ஜோதிடத்தை எடுத்துக் கொள்வோம். ஜோதிடம் ஒரு உயரிய வானியல் கணிதம். ஒரு மனிதனின் வாழ்க்கையை துல்லியமாக கணிக்கக் கூடியது. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில், துல்லியமாக ஜோதிடம் சொல்லக்கூடிய மனிதர்கள் மிகக்குறைவு. ஒரு ஜோதிடர் தவறாக ஆருடம் கூறிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதை நம்புபவர்களுக்கு அவர்கள் நம்பும் விசயங்கள் அப்படியே நடக்க வாய்ப்பிருக்கிறது.
ஒருவருக்கு நல்ல விசயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன ஆனால் ஜோதிடர் கூறியதால் எனக்கு நல்லவை நடக்காது என்று அவர் நம்பிக்கைக் கொண்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். மற்றொருவருக்கு தீய விசயங்கள் நடக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்தும் ஜோதிடர் கூறியதால், அவர் எனக்கு தீய விசயங்கள் நடக்கும் என்று நம்பிக்கை கொண்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இவ்விரண்டு முன் முடிவுகளும் அவர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இதனால் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் ஜோதிடம் பார்ப்பது தடைசெய்யப்பட்டது.
ஒருவரின் மனதில் நான் வெளிநாட்டுக்குச் சென்று உழைத்தால் தான் செல்வந்தனாவேன் என்ற முன்முடிவு இருந்தால்; உள்ளூரில் எவ்வளவு உழைப்பைப் போட்டாலும் அவருக்கு போதிய செல்வத்தையும் வெற்றியையும் தராது. ஒருவர் பெரிய மருத்துவமனையில் மருத்துவம் செய்தால் தான் எனது நோய் குணமாகும் என்ற முன்முடிவை வைத்திருந்தால்; எவ்வளவு நல்ல மருந்தை உட்கொண்டாலும் சரியான மருத்துவம் செய்தாலும் அவரது நோய் குணமாகாது.
இன்றைய காலகட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோருக்கு உண்மையான நோய் கிடையாது. ஆனால் நான் இருக்கும் ஊரில் கொரோனா வைரஸ் பரவுவதாகச் சொல்கிறார்களே, அது எனக்கும் வந்துவிடும், என்ற முன்முடிவும் அச்சமும், அவர்களின் உடலில் நோய்களையும் நோய்க் கிருமியையும் வளரச்செய்கிறது. இது அவர்களின் மனம் சுயமாக உருவாக்கிய நோய்.
மனதில் ஒரு முன்முடிவு உருவாகிவிட்டால் அந்த எண்ணம் அனைத்து சூழ்நிலைகளில் மீதும் ஆதிக்கம் செலுத்தும். விதியையும் மதியையும் கட்டுப்படுத்தும். துரதிருஷ்டவசமாக மனமானது நல்ல விசயங்களை எளிதில் நம்புவதில்லை; ஆனால் கெட்ட விசயங்களை ஏன்? எதற்கு? என்று மறு கேள்விகள் கேட்காமல் உடனே நம்பிவிடும்.
நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட வயதில் தான் எனக்கு நல்லது நடக்கும், அந்த இடத்துக்குச் சென்றால்தான் எனக்கு நல்லது நடக்கும், அவரின் மறைவுக்கு பிறகுதான் எனக்கு நல்லது நடக்கும், இதைச் செய்தால்தான் எனக்கு நல்லது நடக்கும், இவரால் தான் நான் முன்னேற முடியவில்லை, என்பனப் போன்ற பல முன்முடிவுகளை வைத்திருக்கிறோம். அந்த முன்முடிவுகளே நமக்கு பல நல்ல விசயங்கள் நம் வாழ்க்கையில் நடக்கவிடாமல் கிடைக்காவிட்டால் தடுக்கின்றன.
ஒரு குழந்தையைப் போன்று எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் மனதை வெற்று காகிதம் போன்று வைத்திருந்தால், நமது உழைப்புக்கும், நமது முயற்சிக்கும், ஏற்ப நல்ல விசயங்கள் தானாக நம்மைத் தேடிவரும், வாழ்க்கை மேன்மை அடையும்.
Leave feedback about this