ஆராவையும் ஆற்றலையும் சீர்செய்யும் வழிமுறைகள். ஆரோக்கியமற்ற ஆராவையும் குறைந்து போன ஆற்றலையும் சில பழக்க வழக்கங்களின் மூலமாக சீர்செய்து கொள்ளலாம்.
1. உடலுக்கு உவப்பான, எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உட்கொள்வது.
2. அதிகமான பழங்களை உட்கொள்வது. தூய்மையான நீரைப் பருகுவது.
3. போதிய அளவு ஓய்வெடுப்பது, நன்றாக உறங்குவது.
4. மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது.
5. நல்ல மற்றும் உயர்ந்த மனிதர்களுடன் பழகுவது.
6. புனிதமான இடங்களுக்குச் செல்வது, புனித நீராடுவது.
7. தூய்மையான ஆடைகளை அணிவது.
8. மலர்கள் மற்றும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவது.
9. பூ, பன்னீர், சந்தனம், ஜவ்வாது, போன்ற வாசனைத் திரவியங்களில் குளிப்பது.
10. கல்லுப்பு, இந்துப்பு, அல்லது மலை உப்பில் குளிப்பது.
11. குளம், குட்டை, ஆறு, கடல், போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளிப்பது.
12. கோயில், பள்ளிவாசல், மாதா கோயில் போன்ற வழிபட்டு தலங்களுக்குச் செல்வது.
13. தர்கா, சித்தர் சமாதி போன்ற இடங்களுக்குச் செல்வது.
14. தியானம், தவம், யோகா, வணக்க வழிபாடுகள் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை, இழந்த ஆற்றல்களைத் திரும்பப் பெறுவதற்கும், இருக்கும் ஆற்றல்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் உதவும் வழிமுறைகளாகும்.
ஆற்றல் (energy) ஒவ்வொரு மனிதனுக்கும், விலங்குக்கும், தாவரத்திற்கும் மிகவும் அவசியமானது. ஆற்றல் உயிர்களை வாழ வைக்கிறது. ஆற்றல் குறைபாடே உயிர்களைக் கொல்கிறது. மனிதர்களுக்கு உணவு, தண்ணீர், இயற்கை, மழை, பயிற்சிகள், தியானம், பிரார்த்தனை, வழிபாடு போன்றவற்றால் ஆற்றல் கிடைக்கிறது.
உங்களுக்குத் தெரிந்த மற்ற வழிமுறைகள் இருந்தால் கீழே பதிவு செய்யவும்.