பொது

ஆசிரியர்களின் சிறப்பு

pile of assorted-title books

ஆசிரியர்களின் சிறப்பு. அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய பிறகு, ஜப்பான் ராணுவ தளபதிகள் அணுகுண்டின் தாக்கத்தையும் அதன் விளைவையும் மாமன்னரிடம் தெரிவித்தார்களாம். அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த ஜப்பானிய மாமன்னர் முதல் கேள்வியாக எத்தனை ஆசிரியர்கள் அணு குண்டு வீச்சிலிருந்து தப்பித்து மீதம் இருக்கிறார்கள் என்று கேட்டாராம்.

எவ்வளவு பெரிய பாதிப்பு உண்டானாலும் சரியான குருமார்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்தால் அனைத்தையும் கடந்து மீண்டு வந்துவிடலாம் என்று மன்னர் நம்பினார். ஆசிரியர் தொழில் என்பது சாதாரண வேலையல்ல, அது அடுத்த தலைமுறையை உருவாக்கும் படைப்பு தொழில். ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தொழில்.

அதனால்தான் உலகம் முழுவதும் மன்னர்களைக் காட்டிலும் துறவிகளுக்கும் உண்மையான குருமார்களுக்கும் அதிக உரிமையும் மரியாதையும் வழங்கப்பட்டன. உண்மையான உள்ள தூய்மையுடன் பணியாற்றும் அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள், நன்றிகள்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X