நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் நடக்க வேண்டுமா? அவற்றை அடைவது மிகச் சுலபம், உங்களுக்கு என்ன தேவை என்று முடிவுக்கு வாருங்கள். அது ஏன் உங்களுக்குத் தேவை, அதனால் உங்களுக்கு என்ன பயன் என்று சிந்தித்துப் பாருங்கள். அதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன நன்மை என்று சிந்தித்துப் பற்றுங்கள்.
அதை அடையத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குரிய உழைப்பைச் செலுத்துங்கள். இவற்றைச் செய்தால் உங்கள் தேவைகளும் ஆசைகளும் நிச்சயமாக நிறைவேறும்.