ஆரோக்கியம்

ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள

ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள. மனிதன் என்பவன் உயிரும், ஆற்றலும், உடலும், மனமும், கலந்த ஒரு கலவை. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்று.

இந்த உலகில் ஒரு மனிதன் அடைய நினைப்பது எதுவாக இருந்தாலும், அது எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அதை அடைவதற்கு அவனுக்குத் தேவையாக இருப்பது உடல் மற்றும் மனதின் ஒத்துழைப்புதான். உடல் மற்றும் மனதின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த உலகில் யாரும் எதையும் அடையவோ அனுபவிக்கவோ முடியாது.

உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் அடிப்படைத் தேவையாக இருந்தாலும் அதை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பது பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனதின் இயக்கத்தில் தான் உருவாகிறது என்பதை உணராமல், மருந்து, மாத்திரை, வைத்தியம், மூலமாக ஆரோக்கியம் கிடைக்கும் என்று பலர் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“ஆங்கில மருத்துவம் செய்பவர்கள் நோய்களிலிருந்து மீண்டு, முழுமையான ஆரோக்கியம் பெற்றதாக நான் யாரையும் இதுவரையில் பார்த்ததில்லை.”

அலோபதி (மேற்கத்திய) மருத்துவத்தில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன, ஒன்று தினமும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது, மரணம் வரையில் நோயாளியாகவே இருப்பது. இரண்டு நோய் உண்டான உறுப்புகளை நீக்கிவிட்டு ஊனமாக தொந்தரவுகளுடன் வாழ்வது. அல்லது மருந்து மற்றும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளால் நோய் முற்றி அல்லது புதிய நோய்கள் உருவாகி மரணமடைவது.

நோய்களை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்பது ஆங்கில மருத்துவத்துக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. காரணம் அவர்கள் நோய்களின் உண்மையான மூலக் காரணங்களைக் கண்டறிய முயல்வதில்லை, மாறாக அவர்கள் நோய்களின் அறிகுறிகளுக்கு மட்டுமே மருத்துவம் செய்கிறார்கள்.

“ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி பெரும்பாலான மருத்துவங்கள் நோயாளிகளின் நோய்களைத் தீர்ப்பதில் தோல்வி கண்டுள்ளன.”

இதற்குக் காரணம் அவர்களுக்கு மனிதர்களைப் பற்றிய முழுமையான புரிதல்கள் கிடையாது. மனிதன் என்பவன் உடல், மனம், ஆற்றல் மற்றும் உயிரின் கலவை என்பதை உணராமல், உடலுக்கு மட்டுமே மருத்துவம் செய்வதால் எந்தப் பயனுமில்லை. நோய்கள் மனதிலும், ஆற்றலிலும், கர்மாவினாலும் உருவாகலாம். உடலில் உருவாகும் நோய்களுக்கு உடலிலும், மனதில் உருவாகும் நோய்களுக்கு மனதிலும், ஆற்றலினால் உருவாகும் நோய்களுக்கு ஆற்றலிலும், மருத்துவம் செய்ய வேண்டும்.

கர்ம வினைகளினால் உண்டாகும் நோய்களைக் குணப்படுத்த முயற்சி செய்தாலும் கர்மா கணக்கு தீரும் வரையில் அவற்றைக் குணப்படுத்த முடிவதில்லை. கர்மாவினால் உண்டாகும் நோய்களை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அவற்றை அனுபவிப்பதே, அவற்றைக் குணப்படுத்தும் வழிமுறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *