ஆரோக்கியமான சர்க்கரை அளவு என்ன?
மனித உடலுக்குத் தேவையான சரியான சர்க்கரையின் அளவு என்று எதுவுமே கிடையாது. அவரவர் உடல் அமைப்பிற்கும், உடல் உழைப்புக்கும், வாழ்க்கை முறைக்கும், ஏற்ப தான் சர்க்கரை தேவைப்படும். அதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான சர்க்கரையின் அளவு மாறுபடும். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும் தேவைப்படும்.