நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் மருத்துவரோ அல்லது மற்றவர்களோ முடிவு செய்யக் கூடாது. உங்கள் உடல் தான் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கூற வேண்டும். உங்கள் உடலின் செயல்பாட்டை வைத்து உங்கள் ஆரோக்கியத்தின் அளவை அறிந்து கொள்ளுங்கள்.
1. பசி – குறைந்தது இரண்டு வேலை உண்மையான பசி இருக்க வேண்டும்.
2. பசி இல்லாத நேரத்தில் சாப்பிடும் ஆசை அல்லது நொறுக்குத் தீனிக்கு ஆசை உருவாகக் கூடாது.
3. தாகம் – தாகம் அளவோடு இருக்க வேண்டும்
4. சோர்வு – காரணம் இல்லாமல் அசதி அல்லது சோர்வு உருவாகக் கூடாது
5. தூக்கம் – இரவில் படுத்த 10 நிமிடங்களில் தூங்கிவிட வேண்டும், தூக்கம் நிம்மதியாக திருப்தியானதாக இருக்க வேண்டும். தூக்கத்திலிருந்து எதற்காகவும் காலை வரை எழுந்திருக்கக் கூடாது
6. தூங்கி எழும் போது மனம் அமைதியாகவும், உடல் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும்
7. மன நிம்மதி – மனம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். பயம், துக்கம், கவலை, எரிச்சல், பொறாமை போன்ற உணர்ச்சிகள் இருக்கக் கூடாது. எதைப் பற்றியும் பேராசை, ஏக்கம், இருக்கக் கூடாது.
8. தினம் மலம் கழிக்க வேண்டும். நீங்கள் உண்ணும் உணவின் அளவுக்கு ஏற்ப மலம் தினமும் வெளியேற வேண்டும்.
9. சொந்த வேலைகளையும், அன்றாட வேலைகளையும் செய்யும் வேளைகளில் உடலில் சோர்வோ, வலியோ, அசதியோ உண்டாகக் கூடாது.
10. உடலின் உள், வெளி உறுப்புகளில் எந்தத் தொந்தரவுகளும் இருக்கக் கூடாது.
இந்தப் பத்தும் சரியாக இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எத்தனை தொந்தரவு இருக்கிறதோ, அவ்வளவு ஆரோக்கியம் குன்றி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள மற்ற கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.